இன்றுடன் கடை மூடப்படுகிறது.
இனி எப்போதாவது திறக்கப்படலாம், படாமலும் போகலாம்.
நன்றி..
நீரோடையில் மிதக்கும் ஒரு சிறு தக்கை நான். எனக்கென திசைகள் கிடையாது. ஓடையின் நீரலைகளில் என் பயணங்கள்.
இன்றுடன் கடை மூடப்படுகிறது.
இனி எப்போதாவது திறக்கப்படலாம், படாமலும் போகலாம்.
நன்றி..
தமிழ்நாட்டின் 108 சேவை நன்றாகவே வேலை செய்யுதுன்னு சான்று கொடுக்கறாரு ஒருத்தரு. கேட்கவே சந்தோஷமா இருக்கு. நீங்களும் ஏதாவது விபத்தைப் பார்க்க நேர்ந்தால் இது உதவலாம் என இங்கே பதிகிறேன்.
எனக்கு மின்னஞ்சலில் வந்தது இது. இதனை யார் அனுப்பினாங்கன்னு தெரியலை.
மெயில் ஆங்கிலத்தில் வந்தது. அதை மொழிபெயர்க்க நேரமில்லாததால் அப்படியே பதிகிறேன். இது எந்த ரிமோட் கிராமத்திலும் வேலை செய்யுதுன்னு சொல்றாரு..யோவ், எங்களுக்கும் இங்கிலீஷ் தெரியும்யான்னு நீங்க சொல்றது கேக்குது.. அதனால படிச்சிட்டு உங்களுக்கு தெரிஞ்ச மேலதிக தகவலை பின்னூட்டிட்டு போங்க.. நன்றி
-----------------------------------------------
Dear All
I am sharing my personal experience with “108” (EMRI) on their Quick response. When I travel from Pondicherry to Coimbatore last Sunday (02-08-09) night by Bus, the bus met an accident with lorry in National Highway nearby “Atthur” Landmark: “Paaventhar college of Arts and Science”. Two of my co-passenger got injured. One is lady and second is her baby of 15months old. The lady had an injury in her hand and the baby was motionless. The First-Aid kit is also missing in the bus.
The accident happened at mid-night 00:57am. On seeing the condition of the baby and mother, I immediately called 108 at 00:59am. Explained the state of injured persons and location of the place, Village, District & Taluk (assisted by a local person). It took around 3minutes. At 01:03am (within a minute) I got a call from 108 with a conference to the district level center explained the exact location and condition of the persons injured. It took around 3minutes.
At 01:08am again I got a call from the Ambulance saying that they are on the way to accident spot. To be surprise, the Ambulance reached the spot at 01:17am and started the treatment. The baby was brought to the active state (may be due to timely attempt by 108-EMRI) and medicines given for injured lady. At the end of their treatment both of them came to normal. The EMRI 108 Ambulance reached the spot within 15minutes from the receipt of information to them.
Here I would like express one thing that except me, none of the co-passengers were not aware of 108. As I am aware of 108 through training given for EMERGENCY EVACUATION DRILL conducted in June ’09, I could help the co-passengers. Kindly share this experience, so that the people can make use of wonderful service provided by EMRI – “108” in TamilNadu.
---------------------------------------
இதன் முதல் பாகத்தை வாசித்து விடுங்கள்
எல்லா மாணவர்களும் எழுந்து கால்சட்டையின் பின்பக்கம் இருந்த மண்ணை தட்டி விட்டுக் கொண்டனர். சிலர் என்னை பரிதாபமாக பார்த்தனர்.. சிலர் “மாட்டிகிட்டாண்டா” என்றும், சிலர் பார்க்கவே தைரியம் இல்லாத மாதிரியும் கலைந்து சென்றனர். நான் மட்டும் இச்சி மரத்தடியில் நின்று கொண்டிருந்தேன்.
அந்த பள்ளிக்கூடத்தில் மூன்று பெரிய இச்சி மரங்கள் இருந்தன. ஒன்று பத்தாம் வகுப்புக்கூடங்கள் இருக்கும் இடத்திலும் ஒன்று கேம்ஸ் (விளையாட்டு) ரூமுக்கு பின்னாலும், ஒன்று பாஸ்கட் பால் களத்துக்குப் பக்கத்திலும். நான் நின்று கொண்டிருந்தது அந்த மூன்றாவது மரம். அங்கிருந்து ஒரு பத்து மீட்டர் நடந்தால் கேர்ள்ஸ் பிளேகிரௌண்ட் வந்து விடும். அந்த பள்ளியில் ஆண்களுக்காக பெரிய கால்பந்து, கூடைப்பந்து, கைப்பந்து மைதானங்கள் இருந்தன. ஆனால், சாதரண நாட்களில் மாணவிகளுக்கு அங்கு வர அனுமதியில்லை. அவர்களுக்கென்றே இருந்த குட்டி மைதானத்தில் கோக்கோவோ, ரிங் பாலோ விளையாட மட்டுமே அனுமதி.
இரண்டு மைதானங்களுக்கும் இடையில் சிறு சுவர் வேறு உண்டு. ஆக, மொத்த பள்ளியின் தரைப்பகுதியில் ஒரு 10% தான் பெண்களுக்கு. ஆனால், விளையாட்டுப் போட்டி நடைபெறும்போது மட்டும் பெண்கள் சுவர் தாண்டி வருவதுண்டு.
நான் ஜேசுராமையே பார்த்துக் கொண்டு இருந்தேன். அவர் அந்த வழியாக சென்ற இன்னொரு வாத்தியாரிடம் ஏதோ கதைத்துக் கொண்டு இருந்தார். அப்படியே தப்பி ஓடி விடலாமா என்று ஒரு எண்ணம் வந்தது. “சேச்சே.. கூடாது”, என்று நின்றேன்.
“இங்க வா”, என்றார் ஜேசுராம். அருகில் சென்றேன். அமைதியாக கைகட்டி நின்றேன். என் வாயை நினைத்து நானே நொந்து கொண்டேன்.
“தாமஸ பத்தி என்னா சொன்ன?”, என்றார் கொஞ்சம் கடுப்போடு.
“வந்து.. ஒன்ணும் இல்ல சார்”, என்றேன் மழுப்பலாக. எப்படியும் இந்த பதில் இந்த பிரச்சினையை இன்னும் சில நிமிடங்கள் நீட்டிக்க மட்டுமே உதவும் என்று நன்றாக தெரிந்தது.
“தம் அடிச்சிட்டிருந்தானா?”
“சார்”
“தம் அடிச்சிட்டு போற வாற பொன்ணுங்கள் கிண்டல் பண்ணிட்டிருந்தானா?”
அவர் சொன்னது எனக்கு அரை குறையாக புரிந்தது. “சா..ர் அப்படில்லாம் நான்.. சொல்லவே இல்ல..”, அழுது விடுவேன் போல் இருந்தது குரல்.
“சரி.. நீ உள்ளூர்தானா?”, என் அழுகையை மாற்றும் முயற்சியில் இறங்கினார் வாத்தியார்.
“ம்..” என்றேன் முனகலாக.
“உங்கப்பா என்னா பண்றார்?”
“அப்பா சிலோன்ல இருக்காரு”
“சிலோனா நீயு?”, எனக்கு இது ஏற்கெனவே கேட்டது போல் இருந்தது (Deja Vu, அதே கிண்டல்). “சரி.. ஒன்ன அப்பறமா கவனிச்சிக்கிறேன்.. கிளாசுக்கு போ” என்றார். தலை தப்பியது தம்பிரான் புண்ணியம் என்று ஓடினேன்.
-----------------------------------
அதற்கப்புறம் இரண்டு நாட்கள் அதை மறந்தே போனேன். பள்ளிக்கு போகும், வரும் வழியில் குட்டி கனேஷ் கடையில் தாமஸ் தென்படடுகிறாரா என்று பார்த்தேன். ம்கூம்.. அவர் இருக்கவில்லை. எல்லாம் நலம் அன்று சரவணன் அவசர அவசரமாக ஓடி வரும் வரை.
சின்ன ரப்பர் பந்தில் கால்பந்து விளையாண்டு கொண்டிருந்தோம். லஞ்ச் நேரத்தில் எங்கள் பொழுதுபோக்கு அதுதான். வியர்த்து ஒழுகிக்கொண்டிருந்த என்னை பிடித்து நிறுத்தினான். “டேய்.. ஸ்கூல் வாசலில தாமஸ் நின்னுக்கிட்டிருக்காரு”, என்றான். நான் எதுவும் புரியாமல் முழித்தேன்.
“உன்ன கேட்டாரு.. கூட்டிட்டு வரச் சொன்னாரு”, என்றதும் என் முகம் சிவந்தது. வியர்வை இன்னும் கூடியது. காதோரம் வெப்பம் பாய்ந்தது. “போடா.. நான் வரலை என்றபடி” வகுப்பறைக்கு ஓடினேன். அன்று முழுதும் வகுப்பில் மனமே செலுத்த முடியவில்லை. தாமஸின் ஸ்மாஷ் செய்யும் பெரிய கைகள் மட்டுமே ஞாபகம் வந்தன.
அன்று வீட்டுக்கு போகும்போது சாமர்த்தியமாக குட்டி கனேஷ் கடையை தவிர்த்து, மாற்று வழியில் வீட்டுக்குப் போனேன். என் கூடவே தினமும் வீட்டுக்கு போகும் சம்பத், “என்னடா என்கூட வரலையா?” என்றபோது, “இல்ல.. சரவணன் வீட்டுக்கு கொஞ்சம் போகணும்டா” என்று பொய் சொன்னேன். போகும் வழியில் உயரமாக யாரைப் பார்த்தாலும் தாமஸ் போலவே இருந்தது. பயந்து பயந்து மெதுவாக வீடு போய் சேரும்போது சம்பத் அவன் வீட்டு வாசலில் நின்று கொண்டு இருந்தான். “என்னடா, தாமஸண்ணே உன்ன தேடுறாரு.. கனேஷ் கடைகிட்ட இருந்தாரு.. ஒன்ன கேட்டாரு” என்றபோது, எனக்கு பூமி நழுவியது.
அன்று வீட்டில் அம்மா, அக்கா, அண்ணன் என எல்லோரும் “ஏண்டா ஒருமாதிரியா இருக்க?” என்று கேட்டபோது “ஒண்ணுமில்ல” என்று எரிச்சல்பட்டு சமாளித்தேன். அந்த இரவு நீண்டதாக இருந்தது. வந்த கொஞ்ச தூக்கத்திலும் தாமஸ் என் மண்டையை ஸ்மாஷ் செய்ய அது என் கையில் பட்டு என் கை சுக்கு நூறாகியது.
மறுநாள் பள்ளிக்கு செல்லும்போதும், வரும்போதும் மாற்றுப் பாதைகளையே தேர்ந்தெடுத்தேன். வழக்கத்தை விட சீக்கிரமாகவே பள்ளிக்கு சென்று, வெகு தாமதமாக பள்ளியிலிருந்து திருடன் போல பதுங்கி வீடு சென்றேன். பள்ளியில் வெகு சில நண்பர்களைத் தவிர வேறு யாரிடமும் இது பற்று பேசவே இல்லை. ஆனால் மனதுக்குள் குமைந்தேன். மற்றொருபுரம் தாமஸ் குறித்த செய்திகளை யாராவது கொண்டு வந்தவண்ணம் இருந்தனர்.
இந்த ரிஸ்க் எடுப்பது கஷ்டமாக இருந்தது. அதனால் அடுத்த நாள் காலை அறிவித்தேன், “இன்னைக்கு நான் லீவு எடுக்கணும்”
“ஏண்டா?”, என்ற அம்மா என் தூக்கமில்லாமல் சிவந்த கண்களைப் பார்த்து, “என்னடா சொகமில்லையா? சரி போய் தூங்கு” என்றார். ஆனாலும் என் அண்ணன், அக்கா எல்லாரும் ஏதோ சரியில்லை என்ற தொனியிலேயே என்னைப் பார்த்தனர்.
அன்று தற்காலிகமாக தாமஸிடமிருந்து தப்பினாலும் எவ்வளவு நாள்தான் இப்படி போக்க முடியும் என்ற கவலையில் உண்மையிலேயே காய்ச்சல் வந்தது. அன்று மாலை பிரபாகர் வீட்டில் ஹோம்வர்க் என்ன என்று கேட்கப் போய் அப்படியே விளையாடிக் கொண்டிருந்தேன். பிரபாகர் வீட்டுக்கு வெளியே சத்தம் கேட்டது.
“ஹரி இருக்கானா?” என் அண்ணனின் குரல்.
“என்ன?”, என்று எட்டிப் பார்த்தேன்.
“வா!” என்றான் மொட்டையாக
“எங்க.. வீட்டுக்கா?”
“இல்ல.. தாமஸ் உன்ன கூட்டிட்டு வரச் சொன்னாரு.. இங்க சாவடியில இருக்காரு”
“இல்ல,, நான் வரல..” அழுவது போல சொன்னேன்.
“எல்லாம் எனக்கு தெரியும்.. எத்தன நாள்தான் இப்படி ஒளிஞ்சி திரியுவ..? வா, நானும் கூட வரேன்.”
கொஞ்சம் தைரியம் வந்தது. ஆனாலும் எனக்கு தெரிந்த எல்லாக் கடவுள்களையும் வேண்டிக் கொண்டேன். மெது மெதுவாக நடந்தேன். தாமஸின் ஸ்மாஷ் ஞாபகம் வந்து தொலைத்தது.
தூரத்திலிருந்தே தாமஸ் அவரின் சிஷ்யக்கைகள் கூட சாவடியில் இருப்பது தெரிந்தது. வழக்கம்போல் ஒரு சாரம் (லுங்கி) கட்டி, முழுக்கை சட்டை போட்டிருந்தார். முழுக்கையை மடக்கப்பட்டு அரைக்கையாக இருந்தது. சட்டையின் முதல் இரு பட்டன்கள் இருப்பதே வேஸ்ட் என நெஞ்சின் உரம் காட்டிக் கொண்டிருந்தார். ஏதோ பேசிக் கொண்டிருந்தவர்கள் எங்களைப் பார்த்ததும் அமைதியானார்கள்.
“வாடா, பொடிப்பயலே”, என்றார் குரலை கடுமையாக வைத்துக் கொண்டு. நான் கொஞ்சம் தூரத்திலேயே நின்று கொண்டேன். “பக்கத்தில வா” என்றார். நடுநடுங்கி பக்கத்தில் சென்றேன். என் அண்ணன் கொஞ்சம் ஒதுங்கியே இருந்தான்.
“எங்கப்பாகிட்ட என்னடா சொன்ன?”, என்றதும் அதுவரை என்ன நடக்கிறதென்று புரியாமல் இருந்த சிஷ்யக்கைகள் சட்டென்று நிமிர்ந்தன.
“தெரியாம சொல்லிட்டேண்ணே”, என்றேன் முனகலாக. என் காதைப் பிடித்துக் கொண்டார் தாமஸ்.
“தம் அடிக்கிறேன், பொன்ணுங்கள கிண்டல் பண்றேன்னு எங்கப்பாகிட்ட வத்தி வக்கிறாண்டா இந்த பொடிப்பய..” என்றார். சிஷ்யக்கைகள் சுவாரசியமாகின. பொழுது போக ஒரு சின்னப்பயல் கிடைத்தால் போதுமே. நான் சொல்லும் எதுவும் இங்கு எடுபடாது என பேசாமல் இருந்தேன்.
“அதுமட்டுமில்ல.. எனக்கே ரெண்டு நாளா டிமிக்கி குடுக்கறாண்டா.. எவ்ளோ திமிரு இவனுக்கு... என்னடா பேசாம இருக்க?”, என இடது கையை ஓங்கினார். நான் கண்களை இறுக்கி மூடிக் கொண்டேன். ஒரு நொடி, இரண்டு நொடி.. ம்கூம் எதுவும் நடக்கவில்லை. கண்ணைத் திறந்ததும் எல்லாரும் “கொல்” என்று ஒரு சேர சிரித்தனர்.
“பொடிப்பயலா இருக்கன்னு பாக்கிறேன். இனிமே இதுமாதிரி எதுவும் வரக்கூடாது. சரியா”, நான் மௌனமாக இருந்தேன். பயத்தில் பேச்சே வரவில்லை, “சொல்லுடா..” என்று கத்தினார்.
“சரிண்ணே” என்றேன். கண்களிலிருந்து இரண்டு சொட்டு கண்ணீர் எட்டிப் பார்த்தது.
“ஓடிப்போ” என்றபடி காதை விட்டார்.
இவ்வளவுதானா?.. இந்த அஞ்சு நிமிஷம்தானா? இதற்காகத்தானா மூன்று நாட்கள் குமைந்தேன்? ஓடி ஒளிந்தேன்?
அதற்கப்புறம் எப்போது தாமஸைப் பார்த்தாலும், “வணக்கண்ணே” என்று சலாம் வைத்தேன். காலப்போக்கில் தாமஸ் நல்ல நண்பராகிப் போனார். ஆனால், ஜேசுராமுக்கும் எனக்கும் பனிப்போர் தொடர்ந்தது.
அப்போது புரியாத ஒரு விஷயம் இப்போது நன்றாகப் புரிகிறது. தாமஸ் சிகரெட் பிடிப்பதும், பெண்களை கிண்டல் செய்வது ஊர் நடுவே இருக்கும் ஒரு கடையில் அமர்ந்து கொண்டு. அது ஊருக்கே தெரியும். ஜேசுராமுக்கு தெரியாமல் இருக்குமா? அப்படியிருந்தும் என்னை பகடைக்காயாய் வைத்து ஜேசுராம் அவர் மகனை திருத்தவோ அல்லது அவமானப்படுத்தவோ முயன்றிருக்கிறார்.
“என்னடா குட்டி கனேஷ் கடையில் நின்னுக்கிட்டு தம் அடிக்கிறியாம்.. போற வார பொண்ணுங்கள கிண்டல் பண்ணுறியாம்.. ஆறாவது படிக்கிற ஒரு பொடிப்பய என்கிட்ட கம்ப்ளைண்ட் பண்றான்..”, என்று ஒரு அப்பா தன் இளந்தாரி மகனிடம் சொன்னால் என்ன நடக்கும்?
'தட்'
'தட்' என்று வந்து விழுந்தது அந்த கல் கதவு மேல். ரத்த ஓட்டம் முழுவதும் தலைக்கேறி கோபம் வந்தது. வழக்கம் போல எழுந்து சென்று கதவைத் திறந்து "அறிவுகெட்.." இல்லை, அடுத்த கல்லுக்காக காத்திருக்கலாம் என மனது எண்ணியது. சிறிது நேர அமைதி... அதற்குப்பின் மீண்டும் ஒரு கல் 'தட்' என மோதி கதவை உடைத்துக்கொண்டு என் கண்களை நோக்கி... சட்டென்று தூக்கம் கலைந்தது. அரைத் தூக்கத்தில் என்ன நடந்தது என்று ஒரே புதிராக இருந்தது.
சோம்பலும் கையாலாகாத்தனமும் கோபத்துடன் கூட்டு சேர தூக்கம் முற்றிலுமாகக் கலைந்தது. அர்த்த ராத்திரியில் தூக்கம் கலைவதில் உள்ள வெறுப்பு வேறெதிலும் இல்லை. திடீரென நாய்களின் ஓலம் எழுந்து மறைந்து பின், மரண அமைதியாக இருந்தது. இருட்டு பயமுறுத்தியது. என்ன ஒரு கனவு, அப்படியே நிஜம் போல. உண்மையாக மனத்தின் ஓரத்தில் படிந்த பயங்கள், இயலாமைகள்தான் கனவாக உருவெடுக்கும் என எப்போதோ படித்தது ஞாபகம் வந்தது. மீண்டும் 'தட்' என்ற அந்த ஓசையை மனது எதிர்பார்த்தது.
இரவின் வெட்கையில் நாவறண்டு தண்ணீருக்காக ஏங்க, எழுந்து மண்பானையை நோக்கி நடந்தபோது அந்த ஓசை கேட்டது. கண்களை கசக்கி விட்டுக் கொண்டேன். ஓசையில் வேறுபாடு இருப்பதை அறிய சிறிது நேரம் பிடித்தது. மீண்டும் கதவை யாரோ தட்டும் ஓசை. கதவைத் திறக்க, வேர்த்து, விறுவிறுத்து நின்றது இருட்டில் ஒரு உருவம்.
"ஐயா வாசல் லைட்டை கொஞ்சம் போடுங்கய்யா, பாழாப்போன நாய்த்தொல்லை தாங்க முடியல", குரல் முனகலாக வந்தது.
"என்ன ஆச்சுப்பா? இந்த நேரத்தில?" கேள்விகளை அடுக்கியவாறே வாசல் விளக்கை எரிய விட, பகீரென்றது அவனது கெண்டைக்காலை மடித்துக் கட்டியிருந்த லுங்கியின் கீழ் பார்த்த கணம்.
"காட்டில தண்ணி காட்டிட்டு... மோட்டாரை நிறுத்திட்டு இப்பதான்யா வாரேன், வர்ர வழியில அந்த கறுப்பு கிடா நாய் காலில பாய்ஞ்சு...", மேலே பேச முடியாமல் திணறியவனை ஆசுவாசப்படுத்தியபோதுதான் கவனித்தேன், அந்த பக்கமாக வலம் வந்து கொண்டிருந்த நாலைந்து நாய்களை.
அவசரமாக சைக்கிளை வெளியே எடுத்து, கதவை பூட்டினேன். சைக்கிள் பின்புறம் அவனை அமர்த்தி மருத்துவர் வீடு நோக்கி மிதித்தேன்.
-------------------------------------
வீடு திரும்பும்போது சக்கரத்தில் காற்று குறைவாக இருந்ததால், தள்ளிக் கொண்டே நடந்தேன்.
நடக்கும்போது மனம் முழுவதும் அந்த இளைஞர்களை வசை பாடிக்கொண்டே வந்தேன். தினமும் நடு இரவு வரை அரட்டை அரங்கம் நடத்தி விட்டு சந்து வழியே செல்லும் பயல்களின் வேலைதான் இது. என்னதான் உடம்பு வளர்ந்தாலும் அறிவு வளராதவர்கள். அது பாட்டுக்கு சாதுவாக செல்லும் நாயை கல்லால் அடித்து வம்புக்கு இழுப்பானேன். அப்படி என்னதான் நடு இரவு வரை பேச்சோ. நாய்கள் அவற்றின் கோபத்தை ஒன்றுமறியாதவர்களை பதம் பார்த்து தீர்த்துக் கொள்கின்றன. கையில் கல் இல்லாதவன் ஒன்றும் அறியாதவந்தானே. அப்படி அந்த நாய்களை பழக்கி விட்டார்களே....
அதை விட, நாயடிக்கும் சாக்கில் வீட்டு கதவின் மீது கல்லெறிவதுதான் இவர்களது பொழுதுபோக்கு. ஒரு நாள், இரு நாள் என்றால் பரவாயில்லை. பல நாட்கள், பல கற்கள் என் கதவு மீது. தூக்கம் கலைந்து எழுந்து, கதவைத் திறந்து "அறிவுகெட்..." என கத்தும் முன்னரே தபதப என தலைகால் தெறிக்க ஓட்டம். அப்படி என்ன இதில் வேடிக்கையோ?
இருட்டின் நிசப்தத்தில் "அறிவுகெட்..." என உரக்க கத்த வேண்டும் போல் இருந்தது. சட்டென நின்றேன். பின்னாலெ சிறு சத்தம் கேட்டது. என் பின்னே ஒரு நாய் பதுங்குவது தெரிந்தது. மெதுவாக திரும்பி பார்த்தேன். ஒன்றல்ல மூன்று நாய்கள். தெருவோர விளக்கு வெளிச்சத்தில் அவற்றின் கண்கள் மின்னின. குலை நடுக்கம் எடுத்தது. ஓட்டம் பிடிக்கலாமா? இல்லை இல்லை. இரண்டடி பின்வாங்கி சராரென்று குனிந்து ஒரே வாறலில் கையில் இரண்டு கற்கள்.
கையை ஓங்க நாய்கள் எடுத்தன ஓட்டம். ஓங்கின கையை இறக்காமல் ஒரு நாயை நோக்கி கல்லை எறிந்தேன். சில நொடிகள் காற்றில் பயணித்த கல் தரையில் பட்டு எம்பி நேரே சென்று.. 'தட்' . ஆம், என் வீட்டு கதவுதான்.
நல்ல வேளை நான் உள்ளே இல்லை. இருந்திருந்தால் இந்நேரம் கதவைத் திறந்து என்னை நானே, "அறிவுகெட்....".