ஐந்து குழந்தைகள் உள்ள வீடு எப்படி இருக்கும். சில நேரங்களில் விளையாட்டாகவும், பல நேரங்களில் சண்டைக் களமாகவும்தான் இருக்கும். இதில் பெரியம்மா பிள்ளைகள், சித்தி பிள்ளைகளும் சேர்ந்தால் மொத்தமாக இருபது உருப்படி தேறும்.
டி.வியோ, கம்பூட்டரோ இல்லாத காலம் அது. பெரும்பாலும்
சங்கிலி, புங்கிலி கதவை திற
நான் மாட்டேன் வேங்கை புலி
பசு இருக்கா
இல்லை
பால் வாசம் வருது
இல்லை
புல் போட்டு பாக்கவே
வேனாம்
போன்ற சத்தத்துடன் ஏதாவது விளையாட்டு நடக்கும்.
பெரும்பாலான நேரங்களில் கொஞ்சம் வளர்ந்த குழந்தைகள், சிறியவர்களை அமைதிப்படுத்த ஏதாவது செய்த வண்ணம் இருப்பர். அப்படி அமைதியாக விளையாடக் கூடிய ஆட்டம் ஒன்று இருந்தது. அதற்கென்று பெயர் எதுவும் இல்லை.
குழந்தைகள் இரு அணியாக பிரிக்கப்படுவர். ஒவ்வொரு அணிக்கும் ஒரு வளர்ந்த குழந்தை தலைவராக இருப்பார். ஒவ்வொரு அணியும் ஏதாவது ஒரு தீம் (Theme) இல் அணி ஆட்டக்காரர்களுக்கு பெயர்கள் வைக்க வேண்டும். உதாரணமாக ஒரு அணி மிருகங்கள் பெயர்களும், இன்னொரு அணி பழங்கள் பெயர்களும் வைத்து கொள்ள வேண்டும்.
இப்போது
முதல் அணியில்: சிங்கம், புலி, ஆடு, மாடு, கரடி, நரி
இரண்டாவது அணியில்: ஆப்பிள், பலா, மாம்பழம், வாழைப்பழம், நெல்லி, ஆரஞ்சு
இதில் யார் பெயர் என்ன என்பது அந்த அணியினருக்கு மட்டுமே தெரியும். இரண்டு அணிகளும் போதுமான தொலைவு விட்டு அறையின் இரண்டு சுவர்களுக்கு அருகில் அம்ர்ந்திருப்பர்.
மிருகங்கள் அணியின் தலைவர் பழங்கள் அணிக்கு சென்று, அந்த அணியில் ஒருவரின் கண்ணை இருக்கி பொத்தி "கரடியே, கரடியே மெல்ல வந்து மெல்லெ கொட்டிட்டு மெல்ல போ" என்று கூறுவார். கரடியாக பெயரிடப்பட்டவர் மெதுவாக வந்து கண் பொத்தப்பட்டவரின் தலையில் ஒரு கொட்டு விட்டு தன் இடத்திற்கு செல்வார்.
பின் அவரது கண் திறக்கப்படும், அவர் கரடி என்பது யார் என சரியாக சொல்ல வேண்டும். சரியாக சொன்னால், கரடி அவர் அணிக்கு வந்து விடுவார். அவர் தவறாக சொன்னால், மிருகங்கள் அணிக்கு மாற்றப்படுவார்.
இப்போது தீம்கள் மாற்றப்படும். ஒரு அணி நாடுகள் பெயர்களையும், இன்னொரு அணி கிரிக்கெட் வீரர்கள் பெயர்களையும் வைத்துக் கொள்வர்.
இப்போது நாடுகள் (முன்னாள் பழங்கள்) அணியின் தலைவர் கிரிக்கெட் வீரர்கள் (முன்னாள் மிருகங்கள்) அணிக்கு சென்று ஒருவர் கண்ணை பொத்தி “ஜப்பானே ஜப்பானே மெல்ல வந்து மெல்லெ கொட்டிட்டு மெல்ல போ" என்பார். இப்படி ஒரு அணியில் அனைவரும் அடுத்த அணிக்கு மாறும் வரை ஆட்டம் தொடரும்.
"ஏய், கண்ண இருக்கி பொத்தாத வலிக்குது"
"ஏண்டா என்னய மாடு மாதிரி கொட்டின?"
"ஏய், நீ யாருன்னு கண்ண காட்டின.. இது அழிச்சாட்டம்..."
"எனக்கு கரடி வேணாம், நான் ஒட்டகமா இருக்கேன் பிளீஸ்"
"ஹே.. கொரங்கு அப்படியே அது மாதிரி இருக்குடா"
என்று ஏதாவது சத்தம் வந்த வண்னம் இருக்கும். பெரும்பாலும் இதுவும் சண்டையில்தான் முடியும்.
ஒரு அணியின் தலைவரே மற்ற அணிக்கு மாற்றப்பட்டால், அந்த அணிக்கு ஒரு புதிய தலைவர் நியமிக்கப்படுவார்.
ஆட்டம் விறுவிறுப்பாக போன நேரங்களும் உண்டு. ஒரு அணியில் ஒருவர் தவிர எல்லா ஆட்டக்காரர்களும் மற்ற அணிக்கு போனபின்னரும், படிப்படியாக ஒவ்வொருவரையாக இழுத்து வெற்றி பெறுவது உண்டு.
ஏமாற்றுக்காரர்கள் இல்லாத விளையாட்டா? அதுவும் நடக்கும்... சங்கேத மொழியில் வந்தது யார் என்று சொல்வது, கிசுகிசுப்பது, வேண்டுமென்றே தவறாக சொல்லி எதிர் அணிக்கு செல்வது என மேட்ச்-பிக்ஸிங்கும் நடக்கும்.
நீங்க அது விளையாடி இருக்கீங்களா? அதுபோல் இப்போ விளையாட ஆசையில்லையா?
Tuesday, January 22, 2008
சின்ன வயசு விளையாட்டு - மெல்ல வந்து மெல்ல கொட்டிட்டு
Labels:
அனுபவம்,
குழந்தைகள்
Subscribe to:
Post Comments (Atom)


5 comments:
இந்த விளையாட்டுக்கு எனக்கு தெரிஞ்ச பேர், "மெல்ல வந்து மெல்ல கொட்டிட்டு மெல்ல போ" அப்படீங்கறதுதான். வேற பேர் ஏதாவது உங்களுக்கு தெரியுமா?
எங்க ஊர்ப்பக்கம் இன்னும் கொஞ்சம் வித்தியாசமா இருக்கும்.எதிரெதிரே இரு அணி மெம்பர்களும் உட்கார்ந்திருக்க, அணித்தலைவர் எதிரணி உறுப்பினரின் கண்ணைக்கட்டியவாறு ஒரு பாட்டு பாடி, பாட்டின் இறுதியில் தன் அணி உறுப்பினரை அழைத்து கொட்ட சொல்வார். கண்டுபிடித்த ரிசல்டைப் பொறுத்து, அணி உறுப்பினர் இரண்டு கால்களையும் சேர்ந்தவாறு ஒரு லாங் ஜம்ப் எதிரணி இருக்கும் திசையை நோக்கி செய்யவேண்டும்.எதிரணியின் எல்லைக்குள் நுழையும் வரை இது தொடரும். (நான் புரியும்படி சொல்லியிருக்கேனா?)
வாங்க தங்ஸ், வருகைக்கு நன்றி..
//நான் புரியும்படி சொல்லியிருக்கேனா? //
நல்லாவே புரியுது. நான் விளையாண்டதில லாங் ஜம்ப் எல்லாம் கிடையாது. நேரா டிரான்ஸ்பர்தான்.
ஒரு தரம் தப்பா சொன்னா, ஒரு ஜம்ப் முன்னாடி. அடுத்த தரம் அவர் சரியா சொன்னா, பின்னால ஒரு ஜம்ப் உண்டா?
நீங்களும் இதை விளையாடி மகிழ்ந்திருக்கிறீர்கள் என்பதில் மகிழ்ச்சி.
//ஒரு தரம் தப்பா சொன்னா, ஒரு ஜம்ப் முன்னாடி. அடுத்த தரம் அவர் சரியா சொன்னா, பின்னால ஒரு ஜம்ப் உண்டா?//
எதிரணிக்கு ஒரு ஜம்ப் கிடைக்கும்:-))
//எதிரணிக்கு ஒரு ஜம்ப் கிடைக்கும்:-))//
புரியுது. லாஜிக் கரக்டா இருக்கு.
Post a Comment