கொழும்பில் நான் காலடி எடுத்து வைத்த முதல் நாள் ஏதோ திக்கு தெரியாத காட்டில் புகுந்தது போன்ற உணர்வை தந்தது. கட்டுநாயக்காவை விட்டு வெளியே வந்ததும் தெருவெங்கும் நின்ற ஆர்மிக் காரர்களை பார்த்து சற்று மிரண்டுதான் போனேன். “இணைந்த கைகள்” போன்ற படங்களில் மட்டுமே பார்த்த துப்பாக்கிகளை வைத்துக் கொண்டு தெருவில் நிற்பவர்களை பார்த்தால் எப்படி இருக்கும்.
சிங்களம் தெரியாமல், முதல் சில நாட்கள் பெரும்பாலோருடன் இங்கிலீஷ்தான். சிங்களவர்களிடம் பொதுவாகவே தோற்றுவிக்கப்பட்ட ஒரு பயம் இருந்த்து. ஆனால், முதல் சந்திப்பிலேயே "மச்சாங்" என்று அழைக்கும் அவர்களிம் நட்பு பாராட்டும் குணம், அந்த பயத்தை முதல் நாளிலேயே போக்கி விட்டது.
சில நாட்களிலேயே ஒரு நண்பர் குலாம் சேர்ந்து விட்டது. சிங்களர், தமிழர், முஸ்லிம், பர்கர் என கலவையான ஒரு குலாம் அது. மாலை வேளைகள் எப்போதும் "ஒட்டர்ஸ்" கிளப்பில் நீச்சல் குளம் அருகிலேயோ, ஏ/சி பாரிலேயே "ஓல்ட் ரிசர்வ், டெவில் சிக்கன்" என கலந்து கட்டும். வெள்ளிக்கிழமை பின்னிரவு நேரங்களோ லெஜன்ட்ஸ், MKOP என நீளும்.
மொக்கத, கீயத, கவுத, கொஹேத, கோஹமத என ஆரம்பித்த கற்கை சில மாதங்களிலேயே, சிங்களரின் ஸ்டைலிலேயே (அரை குறையானாலும்) பேசும் நம்பிக்கையை கொடுத்தது. அப்படி கற்ற ஒன்றுதான் "எலக்கிரி".
எலக்கிரியின் நேரடி மொழிபெயர்ப்பு "ஆட்டுப்பால்" என்பதே ஆகும். சூப்பர் என்ற வார்த்தையை நாம் பயன்படுத்துவது போலவே "எலக்கிரி" பயன்படுத்தப்பட்டது.
ஒரு நாள் ஏதோ பேசிக் கொண்டிருக்கும்போது ஒரு சிங்கள நண்பன் பலத்த உற்சாகத்துடன் "எலக்கிரி சஹ ஜலய" என்றான். எனக்கு அது புரிந்தும் புரியாமலும் இருந்தது. பின்னால்தான் தெரிந்த்து, "ரொம்ப சூப்பர்" என்பதுதான் அது என்பது. இத்தனைக்கும், "எலக்கிரி சஹ ஜலய" என்பதன் நேரடி அர்த்தம், "ஆட்டுப்பாலும், தண்ணீரும்" என்பதே.
இதே போல் "எல த ப்ரா" என்பது புழக்கத்தில் இருந்தது. எதற்காக இதற்குள் "ப்ரா" வந்தது என்பது புரியாததே.
எலக்கிரி போலவே பழக்கமான இன்னொரு வார்த்தை "கேல்ல" என்பது. இதன் நேரடி அர்த்தம் "துண்டு" என்பது. ஆனால் அதை உபயோகிப்பதோ "பிகர்" என்பது போலத்தான்.
இப்படியாக பல பல வார்த்தைகள். இப்போது அமர்ந்து வாழ்க்கை புத்தகத்தை பின்னோக்கி புரட்டினால், கொழும்பு பக்கங்கள் எனக்கு " எலக்கிரி சஹ ஜலய" தான்.
Monday, February 18, 2008
கொழும்பு வாழ்க்கை - எலக்கிரி சஹ ஜலய
Subscribe to:
Post Comments (Atom)


1 comments:
தன் கையே தனக்கு...... உ....த......வி
Post a Comment