கிரிஸ்டோதான் அந்த சோக செய்தியை முதல் முதலா சொன்னான். சாயங்காலம் என் குழந்தை கூட விளையாடிகிட்டு இருக்கும்போதுதான் அழைப்பு வந்தது
“சொல்லு கிரிஸ்டோ”
“நம்ம சுஜாதா நியூஸ் கேள்விப்பட்டியா?” செய்தி கேட்டதும் கொஞ்சம் பதற்றமா இருந்தது.
“நாளைக்கு எடுக்கிறாங்களாம். வாரியா போலாம்”
“எங்கடா பெங்களூருக்கா? அவ்ளோ தூரம் எப்படிறா திடீர்னு”
“டேய், சென்னையில அவங்க சொந்த வீட்டில வச்சுதாண்டா எடுக்கிறாங்க”
சுஜாதாவுக்கு சென்னையில் சொந்த வீடு இருப்பது எனக்கு தெரியாத ஒன்று. அடுத்த நாள் மதிய உணவு இடைவேளையில் போவதாக முடிவானது. கொஞ்ச நேரத்திலேயே ஜாபர் அழைத்தான். அதே செய்தி.
“நீ போகமாட்டியே, ஒனக்குதான் சுஜாதா சுத்தமா பிடிக்காதே”, என்றான் ஜாபர்.
“போடா பழங்கதையை ஏன் கிண்டற... கிரிஸ்டோ கூட நாளைக்கு போறேன்” என்றேன்.
சுஜாதா எனக்கு சுத்தமா பிடிக்காதுன்னு சொல்ல முடியாது.. அது ஒரு பத்து வருஷ பழைய கதை.

----------------------------------------------------------------
அது கல்லூரியில் இரண்டாவது வருஷம் ஆரம்பமான காலம். கேம்பஸ் முழுக்க புதுமுகங்கள் உலாவின. “ரேகிங்” என்ற வார்த்தை பேசினாலே சீட்டை கிழிக்கும் கல்லூரி என்பதால புதுமுகங்கள் கொஞ்சம் அலர்ஜிதான். அப்படி ஒரு நாளிலதான் அவளை பார்த்தேன்.
நான் கேண்டீன் வெளியே வரும்போது, அவள் உள்ளே வந்தாள். கண்ணும், கண்ணும் கொஞ்ச நேரம் நோக்கியா. எனக்கு பெரிதாக எதுவும் இல்லை. ஆனால் அவள் கண்களை என் மேலிருந்து எடுக்க முடியாமல் திணறுவதாக பட்டது. ஒருவேளை எனக்குதான் நெனப்ஸ் என்று நகர்ந்து விட்டேன்.
அதற்கு அப்புறம் சில முறை கேம்பஸில் அங்கிங்கு அவளை பார்த்தேன். ஒவ்வொரு முறையும் அவள் என்னை பார்த்து சிரிக்க முயன்றதாக எனக்கு பட்டது என் பிரம்மையா என தெரியவில்லை.
ஒரு பத்து நாள் கடந்திருக்கும். கேண்டீனில் வழக்கமான அரட்டை அரங்கத்தில் சுஜாதாதான் மெயின் டாப்பிக். ஆயுசு நூறு என்பது போல் அவளே உள்ளே நுழைந்தாள். ஒரு கையை பின்னால் வைத்திருந்தாள். எல்லா கண்களும் அவளை நோக்கி. எல்லா உதடுகளிலும் ஜொள்ளு.. மெல்ல அருகில் வந்தாள்.
“புகழ்” என்றாள்.
“நாந்தான்”
சரேலென பின்னால் இருந்த கை முன்னால் வந்தது. அதில் ஒரு அழகான கருஞ்சிகப்பு ஒற்றை ரோஜா.. என்னிடம் நீட்டினாள்.
“எதுக்கு”
“ஜோதி இதை உங்ககிட்ட கொடுக்க சொன்னாங்க..”
நான் திருதிரு என முழித்தேன்.
“ரேகிங்காம்... அப்படியே நீங்க வாங்கிட்டதுக்கு அத்தாட்சியா இந்த பேப்பரில் சைன் வாங்கிட்டு வர சொன்னாங்க.. ப்ளீஸ்” என்றாள்.
அந்த வார்த்தை கேட்டதுமே பதறி விட்டேன். சட்டு புட்டுன்னு கையெழுத்து போட்டு அவளை இடத்தை காலி பண்ண வைத்தேன். அதன்பிறகு எல்லார் கன்ணும் என் மேல்தான் இருந்த்து. “மச்சண்டா உனக்கு” என்றார்கள். எனக்கு தலை சுற்றியது. ரோஜாவை பக்கத்தில் இருந்த குப்பைத் தொட்டியில் எறிந்தேன்.
அன்று மாலையே ஜோதியை பாஸ்கெட் பால் கோர்ட் அருகில் பார்த்தேன்
“என்ன ஜோதி.. பொண்ணுகிட்ட பூவெல்லாம் குடுத்து அனுப்புற?”
“எந்த பொண்ணு, என்ன பூ”, சந்தேகமாக என்னை பார்த்தாள்.
“அதான், அந்த சுஜாதா..., நீ ரேகிங் பண்றதா எனக்கு ரோஸ் கொண்டு வந்து கொடுத்தா”
“அவளை ஒனக்கு பிடிச்சிருந்தா, அதை அவகிட்டயே சொல்லலாமே” கிண்டல் நிறைந்த தொனி எரிச்சல்தான் தந்தது.
மறுநாள் சுஜாதாவுக்காக லெக்சர் ஹால் வாசலில் காத்திருந்து மடக்கி பிடித்தேன்.
“நேத்து ஜோதியை பாத்தி பேசினேன்” என்றேன்.
“தெரியும்...”
“ஏன் பொய் சொல்லி ரோஜா கொடுத்த..?”
“உங்களை பிடிச்சிருந்தது. உங்ககூட பிரண்ட்ஷிப் வச்சிக்கலாம்னு”
“நட்புக்கு எதுக்கு ரோஜா...” என்றேன், குறும்பாக சிரித்தாள். மொத்த காலேஜும் எங்களை பார்த்துக் கொண்டிருந்த்து.
எனக்கு காதல் சுத்தமாக பிடிக்காத ஒன்று. ப்ராக்டிகல் வாழ்க்கையில் காதலுக்கு இடமில்லாத தத்துவம் என்னுடையது. எனக்கென்று என் குடும்பம், குடும்பத்தின் பிரஸ்டீஜ், லட்சியம், கனவு இத்யாதி இத்யாதி எல்லாம் குறுக்கே வரும் என்று தெரிந்ததாலோ என்னவோ சுஜாதா என் கண்களுக்கு அழகாக தெரியவில்லை.
கல்லூரியில் யார் பார்த்தாலும், சுஜாதா புராணம் பாடிக்கொண்டிருந்தார்கள். ஒவ்வொரு முறை அவள் பேச்சு வந்தாலும், “சுஜாதாகிட்ட அப்படி என்னதான் இருக்கு?” என்றேன்.
“ஆமா, இவரு பெரிய சந்நியாசி” என்றார்கள்.

சுஜாதா வீட்டு வாசலில் நிறைய செருப்புகள் இருந்தது, சினிமா காட்சிகளை ஞாபகப்படுத்தின. உள்ளே நுழையும்போதே சுஜாதாவை பார்த்து விட்டேன். ஒரு ஒரத்தில் நின்று விசும்பிக் கொண்டு இருந்தாள். அவள் காலைக் கட்டிக் கொண்டு ஒரு மூன்று வயது மதிக்கத்தக்க சிறுவன் ஒன்றும் புரியாமல் பார்த்துக் கொண்டு இருந்தான். அவள் மகனாக இருக்க வேண்டும். அவள் அருகில் ஒரு மரப்பேழையில் அவள் கணவன் உடல் கிடத்தப்பட்டு இருந்த்து.
சுஜாதா கல்யாணத்துக்கு பத்திரிக்கை வந்தும் நான் போகவில்லை. முதல் முறையாக அவள் கணவனை இப்படி பார்ப்பதில் வருத்தம்தான்.
சுஜாதா அருகில் சென்று நின்றேன். காலேஜில் பார்த்ததை விட அவள் முகம் இன்னும் பொலிவாக இருந்தது. அழும்போது அழகாக தெரிந்தாள். என்னை அடையாளம் கண்டு கொண்டாள். ஆனால், பேச முடியாமல் அழுகை அடைத்து. அவள் அழுதபோது அப்படியே அள்ளி மார்போடு அணைத்து ஆறுதல் சொல்ல வேண்டும் போல் இருந்த்து. ஏதோ நெஞ்சை அடைத்தது. நிற்க முடியாமல் ஒரு கும்பிடு போட்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்தேன்.
வெளியே வந்தபோது அவள் முகமே மனம் முழுசும் நிறைந்து இருந்த்து.
“இவ்ளே சின்ன வயசில ஹார்ட் அட்டாக்கா?”
“யாருக்கு எப்ப வரும்னு சொல்ல முடியாது”
“இந்த காலத்து பசங்களுக்கு வேலை ஸ்ட்ரெஸ் ஜாஸ்திங்க” என பேசிக்கொண்டார்கள்.
எனக்கோ எங்கு திரும்பினாலும் சுஜாதா அழுது கொண்டு நிற்கும் காட்சி தெரிந்தது.

அடுத்த ஒரு வாரம் சுஜாதாதான் ஆக்கிரமித்தாள் என்னை... மொத்தமாக. “ஒரு வாரம் தள்ளிப் போட்டால் எல்லாம் சரியாய்டும்”, எனக்கு நானே சொன்ன சமாதானம்.
ஆனாலும் இருப்பு கொள்ளவில்லை. கிரிஸ்டோவை அழைத்தேன்..
“சொல்லு புகழ், என்ன விசேஷம்?”
“அன்னைக்கு அவங்க வீட்டில பாத்தப்ப சுஜாதா கூட சரியா பேச முடியல, அவங்க நம்பர் கொஞ்சம் குடுடா”
அவளது எண்ணை “சுஜாதா” என என் செல்பேசியில் ஸ்டோர் செய்து கொண்டேன்.
அன்றே சாயங்காலம், அவளுக்கு தொலை பேசினேன். அவள்தான் எடுத்தாள்
“ஹலோ”
“ஹலோ, நான் புகழேந்தி... அன்னைக்கு உங்க வீட்டில உங்க கூட பேச முடியல, எப்படி இருக்கீங்க”
உரையாடல் ஒரு பத்து நிமிடம் நீடித்தது.
“ஒரு நாள் வீட்டுக்கு வாங்களேன்” என்றேன்.
“நீங்களும் கட்டாயம் வரணும், உங்க குடும்பத்தோட” என்றாள்.
ஒரு மாலை நேரம், கொஞ்சம் பழங்களும், பையனுக்கு சாக்லேட்டும் வாங்கிக் கொண்டு அவள் வீட்டுக்கு போனேன்.
உற்சாகமாக வரவேற்றாள்.
“நீங்க வருவீங்கன்னு எதிர்பார்க்கவேயில்ல.. எங்க வொய்ப், பாப்பா?” என்றாள்
“அவங்களை எங்க வீட்டுக்கு வந்து பாத்துக்கங்க” என்றேன்
கொஞ்சம் தேநீருடன், கல்லூரி அதன் பின்னான வாழ்க்கை என்று பொதுவாக பேசினோம். வருண் என்னோடு நல்லாவே ஒட்டிக் கொண்டான்.
“எங்க வீட்டுக்கு வா.. உன்னோட விளையாட ஒரு பாப்பா இருக்கு” என்றேன்
“எந்த ஹெல்ப் வேணுன்னாலும் தயங்காம கேளுங்க சுஜாதா” என்று என் தொலைபேசி எண் கொடுத்தேன்.

ராதாவுடனான வழக்கமான இரவு உரையாடலின் போது, அந்த அழைப்பு வந்தது. ராதா செல்பேசியை எடுத்தாள்.
“யாரு சுஜாதா?”
“பிரண்டு.. குடு”
கொடுத்தாள்.
“ஹாய்...” என்றபடியே ராதா முகத்தை பார்த்தேன். எக்கச்சக்க கேள்விக்குறிகள் அவள் முகத்தில்.
அதற்கப்புறம் பல நாட்கள். சுஜாதா பேசாவிட்டாலும், நான் அழைத்து பேசினேன். பெரும்பாலான உரையாடல், தனித்து வாழும் அவளது வாழ்க்கையின் துயரம் குறித்தோ.. அல்லது ஏதாவது ஆலோசனை கேட்பதோதான்.
ஒருநாள், ஆபீஸில் இருக்கும்போது சுஜாதாவிடமிருந்து அழைப்பு. மாலை வீட்டுக்கு கொஞ்சம் வந்து போக முடியுமா என்றாள். ஏற்கனவே கொஞ்சம் தாமதமானதால், ராதாவை தொலைபேசியில் அழைத்தேன்
“இன்னிக்கு கொஞ்சம் லேட்டாகும்”
“ஏன் ஏதாவது முக்கியமான வேலை இருக்கா?”
பொய் சொல்ல தோணவில்லை, “சுஜாதா வீடு வரைக்கும் போய்ட்டு வரேன்”
சுஜாதா இன்சூரன்ஸ் சம்பந்தமான சில வேலைகளில் சந்தேகம் கேட்டாள். சில படிவங்கள் நிரப்புவதற்கு உதவி செய்தேன். பேசிக் கொண்டே இருந்த்தில் நேரம் போனதே தெரியவில்லை. வீடு சேர வேகு தாமதமாகியது. கதவை திறந்ததும் ராதா எதுவுமே பேசவில்லை.
அன்று இரவு பாப்பா நடுவில் படுத்து இருக்க, இருவரும் படுக்கையின் இரு பக்கங்களும் அமர்ந்திருந்தோம். வழக்கமான இரவு உரையாடல் நேரத்தில் வெறும் மௌனம். நான் ராதாவின் கண்களை பார்த்தேன். அவள் ஒரு குறும்பு சிரிப்புடன் என் கண்களை உற்றுப் பார்த்து கேட்டாள்.
“சுஜாதாகிட்ட அப்படி என்னதான் இருக்கு?”

8 comments:
Test Comment...
Hello Ppattian
How are you :]
your writing this story just remember my college life what a
evere green day with my girl friend
Thank you very much.
write this story to contionus part 2 I am waiting for that.
yours
siva
Pondicherry.
அருமையான கதை; காலத்திக்கேற்ற தலைப்பால்....
வாங்க புதுவை சிவா
உங்க பழைய நினைவுகளை கிண்டினதுக்கு மகிழ்ச்சி. பார்ட் 2 பத்தி யோசிக்கலாம்....நன்றி
வாங்க யோகன் - பாரிஸ்
//அருமையான கதை; காலத்திக்கேற்ற தலைப்பால்....//
நன்றி.. தலைப்பு வைக்க இப்பெல்லாம் ரொம்ப யோசிக்க வேண்டி இருக்கு..:)
வாழ்த்துகள்.. கதை நல்லா வந்திருக்கு.. கடைசி கொஞ்சம் நடப்புகள் கொஞ்சம் வேகமா இருக்க மாதிரி இருக்கு..

நன்றி சௌம்யா..
//கடைசி கொஞ்சம் நடப்புகள் கொஞ்சம் வேகமா இருக்க மாதிரி இருக்கு..
//
எழுதும்போதே ஒரு சோம்பேறித்தனம் எட்டி பார்ப்பதால இந்த மாதிரி ஆய்டுதோ..
சூப்பர் தல கலக்கிபுட்டிங்க....
Post a Comment