Thursday, April 17, 2008

ரெண்டுதான் எனக்கு ராசி - வ.வா.ச போட்டிக்காக

எங்க வீட்டில நான் ரெண்டாவது பிள்ளை. நான் பிறந்தது 2-2-1972 அன்னிக்கிதான். அந்த ஆஸ்பத்திரியில அன்னிக்கி பொறந்த ரெண்டாவது குழந்தை நாந்தான். சரியா ரெண்டு மணிக்கு பொறந்தேனாம். என்ன அம்மாவும், அப்பாவும் ரொம்ப பாசத்தோட வளத்தாங்க. அதனால என் அண்ணன் என்ன வெறுத்தானான்னு சினிமாத்தனமா கேக்கப்படாது.. ஏன்னா, எனக்கு அண்ணனே கெடையாது. அக்கா மட்டுந்தான். அவளும் என் மேல பாசமா இருந்தா.

ரெண்டு வயசு ஆனதும் நான் பேச ஆரம்பிச்சேன். அப்பதான் என் அப்பாவுக்கு வியாபாரத்தில லாபம் ரெண்டு மடங்காச்சு, பெரிசா ரெண்டு வீடு வாங்கினாரு, ரெண்டு கம்பெனி ஆரம்பிச்சாரு. வாழ்க்கை ரெட்டிப்பு சந்தோஷமா போச்சு.

நான் ரெண்டாவது படிக்கும்போது, என் டீச்சர் என் சாமர்த்தியத்தை பாத்துட்டு, எனக்கு டபுள் ப்ரமோஷன் கொடுத்ததால நான் ரெண்டாவதுக்கப்புறம் நேரடியா நாலாவது படிச்சேன். எங்க வீட்டில அந்த சந்தோஷத்தை கொண்டாட எனக்கு சைக்கிள் வாங்கி தந்தாங்க.. நான் எனக்கு ரெண்டு சைக்கிள் வாங்கி தாங்கன்னு அடம் புடிச்சி வாங்கிட்டேன். அதுக்கப்புறம் எது வாங்கினாலும் எல்லாம் ரெண்டு ரெண்டாத்தான் வாங்கினேன்.

நாலாவதுக்கப்புறம் எல்லா வகுப்பிலயும் நான் ரெண்டாவது ரேங்க்தான் வாங்கினேன். பத்தாவதில நான் வாங்கின மார்க் 422 (தமிழ் 82, ஆங்கிலம் 82, கணக்கு 92, அறிவியல் 92, வரலாறு மட்டும் 74) அதிலருந்து எனக்கு வரலாறுன்னாலே புடிக்காது. அஜித் நடிச்ச வரலாறு கூட பாக்கலைன்னா பாத்துக்கங்களேன். +2 வில பர்ஸ்ட் குரூப் கிடைச்சும் விடாப்பிடியா செகண்ட் குரூப்தான் எடுத்து படிச்சேன். ரெண்டாவது வரிசையில் ரெண்டாவது பெஞ்சிலதான் உக்காந்தேன். +2விலயும் ஸ்கூலில ரெண்டாவது இடம்தான் எனக்கு. என் மார்க் 1022.

ரெண்டு காலேஜில எனக்கு சீட்டு கிடைச்சுது. ரெண்டாவதா வந்த காலேஜிலதான் சேந்தேன். ரெண்டாவது வருஷம் படிக்கறப்போதான் கீர்த்தானாவை பாத்தேன். ரெண்டு வருஷத்துக்கப்புறம் அவ என்னை கழட்டி விட்டுட்டா. கேம்பஸ் இண்டர்வியூவில ரெண்டு கம்பெனியில வேலை கிடைச்சுது. முதல் கம்பெனி பெரிய பிரபலமானது, மூணு லட்சம் சம்பளம் கொடுத்தாங்க. ரெண்டாவது கம்பெனி, சின்ன கம்பெனி, ஆனா, ரெண்டு லட்சம் கொடுத்தாங்க. அதனால ரெண்டு லட்சம் குடுத்த ரெண்டாவது கம்பெனியில சேந்தேன்.

கம்பெனி ரெண்டாவது மாடியில இருந்ததாலோ என்னவோ, ரெண்டே வருஷத்தில நான் 20 பேர் உள்ள டீமுக்கு மேனேஜர் ஆனேன். எல்லாம் ரெண்டு ரெண்டா வாங்கினேன். ரெண்டு மொபைல் போன், ரெண்டு லேப்டாப், ரெண்டு பைக், ரெண்டு..

சினிமாவே புடிக்காத எனக்கு “ரெண்டு” படம் மட்டும் ரொம்ப புடிச்சி போச்சி. அதில ரீமா, அனுஷ்கான்னு ரெண்டு “காய்” (கானா பிரபாவுக்கு நன்றி) இருந்திச்சே. “இருவர்” படம் கூட ஓரளவுக்கு பிடிச்சது. நான் அடிக்கடி கேக்கற பாடல், சந்தோஷம்னா “இரண்டும் ஒன்றோடு ஒன்று சேர்ந்தது...”, சோகம்னா, “இரண்டு மனம் வேண்டும், இறைவனிடம் கேட்டேன்..”.

ரொம்ப ஒல்லியா இருந்த நான், நல்ல சாப்பிட்டு ஒடம்பை தேத்தி ரெட்டை நாடி சரீரமா ஆனது கூட ரெண்டு எனக்கு ராசிங்கறதுனாலதான். ஆனா, பாருங்க இப்ப ரெண்டுன்னாலே எனக்கு கசக்குது. ரெண்டுன்னு யார் சொன்னாலும் கோவமா வருது.

ஆமாங்க, சந்தர்ப்ப சூழ்நிலையால எனக்கு ரெண்டு பொண்டாட்டி, அவங்க ரெண்டு பேர்க்கும், ரெண்டு ரெண்டு புள்ளைங்க...
--------------------------------------------------------------------------------

ஆனா, வ.வா.ச ரெண்டாவது ஆண்டு விழா கொண்டாடறதால மறுபடியும் ரெண்டு எனக்கு பேவரிட் நம்பர் ஆய்டிச்சு.

வ.வா.சங்கத்துக்கு என் இனிய ரெண்டாவது ஆண்டு விழா வாழ்த்துக்கள். இதே மாதிரி சங்கத்தோட இருபதாவது ஆண்டுக்கும் நான் ஒரு மொக்கை போடறேன்.

11 comments:

வெட்டிப்பயல் said...

தெய்வமே,
உங்க அனுபவம் ரொம்ப சூப்பர்...

வெட்டிப்பயல் said...

ஆனா... ஏன் அதை நகைச்சுவை/நையாண்டில சேர்ந்தீங்க???

வால்பையன் said...

இந்த பதிவு ரெண்டு வருசத்துக்கு முன்னமே வந்துருக்கனுமே

வால்பையன்

PPattian : புபட்டியன் said...

வாங்க வெட்டி

//உங்க அனுபவம் ரொம்ப சூப்பர்...//

என் ப்ரொபலில் இருக்குற் என்னோட Most Recent படத்தை பாட்த்துட்டு சொல்லுங்க, இது என்னோட அனுபவம் மாதிரியா இருக்கு :)

//ஆனா... ஏன் அதை நகைச்சுவை/நையாண்டில சேர்ந்தீங்க???//

இதை எதில சேக்கறதுன்னு எனக்கே தெரியலை.. அவ்வ்வ்வ்வ்வ்வ்..

PPattian : புபட்டியன் said...

வாங்க வால்பையன்

//இந்த பதிவு ரெண்டு வருசத்துக்கு முன்னமே வந்துருக்கனுமே//

ரெண்டு வருஷத்துக்கு முன்ன ஒரு கல்யாணம் கூட ஆகலை. இப்போ நிலைமையே வேற.. அதனாலதான் இந்த பதிவு..... :)

ILA(a)இளா said...

//ரெண்டு வருஷத்துக்கு முன்ன ஒரு கல்யாணம் கூட ஆகலை./
லாஜிக் உதைக்குதே,
ரெண்டு வருசத்துக்கு முன்னாடி கல்யாணமே ஆவலை, ஆனா இப்போ 4 புள்ளைங்க. ரெண்டும் ரெட்டைன்னு கணக்குச் சொல்லுவீங்களா?

PPattian : புபட்டியன் said...

வாங்க இளா

//ரெண்டும் ரெட்டைன்னு கணக்குச் சொல்லுவீங்களா//

என்ன, கேள்வியையும் நீங்களே கேட்டு,கரெக்டான பதிலையும் சொல்லிட்டீங்க... :))))

வெட்டிப்பயல் said...

//
//ஆனா... ஏன் அதை நகைச்சுவை/நையாண்டில சேர்ந்தீங்க???//

இதை எதில சேக்கறதுன்னு எனக்கே தெரியலை.. அவ்வ்வ்வ்வ்வ்வ்..//

தமிழ்மணத்துல அனுபவம்/நிகழ்வுகள் இருக்கும்... அதுல சேர்த்துடுங்க ;)

திகழ்மிளிர் said...

/இந்த பதிவு ரெண்டு வருசத்துக்கு முன்னமே வந்துருக்கனுமே /

:)))))))))))))))

தாங்க முடியாவில்லை
சிரிப்பு தான்

வாழ்த்துக்கள்

இரா. வசந்த குமார். said...

ரொம்ப நல்லா இருக்குங்க...

சுல்தான் said...

//சந்தர்ப்ப சூழ்நிலையால எனக்கு ரெண்டு பொண்டாட்டி, அவங்க ரெண்டு பேர்க்கும், ரெண்டு ரெண்டு புள்ளைங்க...//
// இதே மாதிரி சங்கத்தோட இருபதாவது ஆண்டுக்கும் நான் ஒரு மொக்கை போடறேன்.//
அப்போ இருபது பொண்டாட்டிகள். ஒவ்வொருவருக்கும் இருபது பிள்ளைகளா - தாங்காது