Wednesday, April 23, 2008

இந்தியன் புண்ணாக்கு லீக் - to - பழம் நீ அப்பா : வ.வா.ச 2

இடம்: மலர்வண்ணன் வீடு, நெ. 222, 2வது மெயின் ரோடு, வள்ளல் ராயப்ப கவிராயர் நகர் (எங்க இருக்குன்னு கேக்ககூடாது), சென்னை.

கூடத்தில் மலர்வண்ணன் நகத்தை கடித்தபடி (டென்ஷனாம்) உக்காந்திருக்காரு. முன்னால அவர் கல்யாணத்துக்கு வரதட்சிணையா மாமனார் கொடுத்த சாலிடெர் டி.வி. அவர் பையனும் மனைவியும், அவரையும் தொல்லைக்காட்சியையும் மாறி, மாறி பார்த்தபடி இருக்கிறாங்க.

இந்தியன் புண்ணாக்கு லீக் (IPL) மேட்ச் நடக்குது. “மதராஸ் மாங்கா மடையர்கள்” டீமும், “பங்களூர் பஞ்சப் பன்னாடைகள்” டீமும் மோதும் போட்டி. கடைசி இரண்டு ஓவர் மட்டும் பாக்கி. ம.மா.ம அணி 2 ஓவரில் 22 ரன் எடுக்க வேண்டும். கையில் 2 விக்கெட் இருக்கு. நம்மாளு மலர்வண்ணனுக்கு கிரிக்கெட் எல்லாம் அவ்வளவு இண்ட்ரெஸ்ட் கிடையாது. ம.மா.ம ஜெயிச்சா அவங்களுக்கு கிடைக்கிற பல கோடி ரூபாயில மலர்வண்ணனுக்கு ஒரு பங்கு கொடுக்கவா போறாங்க? அப்புறம் ஏன் இந்த டென்ஷன்? ஏன்னா, ம.மா.ம வெற்றி பெறும்னு மலர்வண்ணன் பெட் கட்டியிருக்காரு. அதும் இரண்டாயிரம் பெட். அவர் மாச சம்பளத்தில நாலில் ஒரு பங்கு பெட்டுனா சும்மாவா.. டென்ஷந்தான்.

கடவுளே, இவிங்க ஜெயிக்காட்டியும் பரவாயில்ல.. தோக்காம இருந்தா போதும். என் ரெண்டாயிரத்தை காப்பாத்துனு வேண்டிக்கிறாரு. ஆபீசுல லஞ்ச் டைம்ல நடந்த வெட்டி கதையாடலில் (இது பின்நவீனத்துவ கதையாக்கும்!), நமக்கும் விஷயம் தெரியும்னு ம.மா.ம பத்தி சும்மா விட்ட பீலாவில, சொல்லாடல் (கன்பர்ம்ட், இது பி.ந கதைதான்) முத்தி பெட்ல போய் முடிஞ்சது. இப்ப தவிக்கறாரு பாருங்க.

மேட்ச் நடந்திட்டே இருக்கும்போது, தீடீர்னு டி.வியில ஒரு குள்ளமான ஆளு வந்து “முதலாளி, கலர் பூசுற நேரம் வந்தாச்சு போல” ன்னு சொல்றாரு.

ஏம்பா, இந்தாளு காலம் காலமா, முடி திருத்தற வேலையே பாக்கறாரு. இவரு புள்ளைங்க ஒரு சாப்ட்வேர் இஞ்சினியராகி, இவரை இந்த அடிமைத்தனத்திலிருந்து விடுதலை செய்ய மாட்டாங்களான்னு பையன் கேட்டது மலர்வண்ணனுக்கு எரிச்சல்தான் கொடுத்திச்சு. அவர் டென்ஷன் அவருக்கு.

அப்பறம், அடுத்த கிரண்பேடி, நாளைய லட்சுமி மிட்டல், நாராயண்சாமி எல்லாம் கை உயர்த்தினாங்க. அடுத்ததா, யங்குஸ்த்தான்லருந்து ஒருத்தர் சாட்டிலைட் டிஷ்ஷை கையில் வச்சுக்கிட்டு முழிச்சாரு, வெண்மைக்கு ஆதாரம் கொடுத்தாங்க, ஆரஞ்சு கலர்ல பெரிய பந்து தூக்கிட்டு போய் ஒருத்தருக்கு பட்டுச்சு.. இப்படி போய்க்கிட்டே இருக்கு, ஆனா போட்டி தொடர்ந்தபாடில்லை.

இடம்: பூவண்ணன் வீடு, நெ. 22, 2வது மெயின் ரோடு, வள்ளல் ராயப்ப கவிராயர் நகர், சென்னை.

கூடத்தில் பூவண்ணன் நகத்தை கடித்தபடி (டென்ஷனாம்) உக்காந்திருக்காரு. முன்னால அவர் கல்யாணத்துக்கு வரதட்சிணையா மாமனார் கொடுத்த சாலிடெர் டி.வி. அவர் பையனும், மனைவியும் அவரையும் தொல்லைக்காட்சியையும் மாறி, மாறி பார்த்தபடி இருக்கிறாங்க.

பூவண்ணன் யாருன்னு இந்நேரம் கண்டுபிடிச்சிருப்பீங்களே.. ஆமாங்க மலர்வண்ணனுக்கு எதிரா சொல்லாடலில் ப.ப.ப டீமுக்காக பெட் கட்டுன அப்பாவி இவருதாங்க. கடவுளே, இவிங்க ஜெயிக்காட்டியும் பரவாயில்ல.. தோக்காம இருந்தா போதும். என் ரெண்டாயிரத்தை காப்பாத்துனு வேண்டிக்கிறாரு

அடுத்த கிரண்பேடி, நாளைய லட்சுமி மிட்டல், நாராயண்சாமி எல்லாம் கை உயர்த்தினாங்க. அடுத்ததா, யங்குஸ்த்தான்லருந்து ஒருத்தர் சாட்டிலைட் டிஷ்ஷை கையில் வச்சுக்கிட்டு முழிச்சாரு, வெண்மைக்கு ஆதாரம் கொடுத்தாங்க, ஆரஞ்சு கலர்ல பெரிய பந்து தூக்கிட்டு போய் ஒருத்தருக்கு பட்டுச்சு.. இப்படி போய்க்கிட்டே இருக்கு, ஆனா போட்டி தொடர்ந்தபாடில்லை.

இடம்: அறை எண் 305, சிவலோகம்.

சிவன் டென்ஷனா உக்காந்து டி.வி பாத்துக்கிட்டு இருக்காரு. பார்வதி, விநாயகர், முருகன் மூணு பேரும் அவரையும் தொல்லைக்காட்சியையும் மாறி, மாறி பார்த்தபடி இருக்கிறாங்க.

இந்தியன் புண்ணாக்கு லீக் (IPL) மேட்ச் நடக்குது. “மதராஸ் மாங்கா மடையர்கள்” டீமும், “பங்களூர் பஞ்சப் பன்னாடைகள்” டீமும் மோதும் போட்டி. கடைசி இரண்டு ஓவர் மட்டும் பாக்கி. ம.மா.ம அணி 2 ஓவரில் 22 ரன் எடுக்க வேண்டும். கையில் 2 விக்கெட் இருக்கு.

“நாதா தங்கள் பக்தர்கள் இருவரும் இவிங்க ஜெயிக்காட்டியும் பரவாயில்ல.. தோக்காம இருந்தா போதும்னு வேண்டிக்கிட்டாங்களே, என்ன செய்ய போகிறீர்கள்?”

“இரண்டு பேர் வேண்டுதலையும் நிறைவேற்றுவதுதான் சிவனுக்கு அழகு”

“அப்படியானால் டை (Tie) ஆகுமா”

“நோ வே, ஏற்கெனவே என் பக்தன் கலர்வண்ணனுக்கு டை ஆகாது என வரம் அளித்து விட்டேன்”

“அப்படியானால் மழையா? டக்வர்த் லூயிஸ்தானா?”

“மழையா? இந்த கொடும் கோடையிலா? அதுவும் சென்னையிலா? நெவர்”

“அப்படீன்னா என்னதான் முடிவு?”

“பொறுத்திருந்து பார்”

இடம்: சேப்பாக்கம் மைதானம்

19வது ஓவரின் முதல் பந்தை வீச ஓடி வராரு ஒரு ப.ப. கிரீஸ் அருகில் வந்துட்டாரு, சட்டுனு மைதானமே மங்கலாகுது. எல்லாம் ஒரே அரை இருட்டா இருக்கு. அம்பயர் ரெண்டு பேரும் டென்ஷன்ல திரியறாங்க. ப்ளேயர்ஸ் எல்லாம் ரிலாக்ஸா கலர் குடிக்கிறாங்க.

-------------------------------------------------------

CNN IBN லருந்து News Today, NDTV, சன் ம்யூசிக் வரைக்கும் இதுதான் தலைப்புச் செய்தி. “சேப்பாக்கத்தின் இரண்டு விளக்கு கம்பங்கள் செயலிழப்பு” (Power Outage in two of the floodlights in Chepauk).

இரண்டு மணி நேரம் போராடியபின் சேப்பாக்க பொறியியலாளர்கள் கையை விரித்தனர். போட்டி கைவிடப்பட்டது, இரண்டு அணியும் தலா ஒரு புள்ளி பெறுகிறதுன்னு வினையூக்கியும், எ.அ.பாலாவும் தமிழ்மணத்தில பதிஞ்சிட்டாங்க.

மலர்வண்ணன் பையனை கட்டிபிடிச்சு முத்தம் கொடுத்துட்டு படுக்கப்போயிட்டாரு.

பூவண்ணன் பையனை கட்டிபிடிச்சு முத்தம் கொடுத்துட்டு படுக்கப்போயிட்டாரு.

சிவன் விநாயகனை கட்டிபிடிச்சு முத்தம் கொடுத்துட்டு படுக்கப்போயிட்டாரு.

முருகன் மட்டும் பாத்துகிட்டே இருந்தாரு. எனக்கு முத்தம் கிடையாதா? மூத்த பிள்ளை செல்லப்பிள்ளை, இளைய பிள்ளை எடுப்பார் கைப்புவா? கோபத்தோட ஆண்டி வேஷத்தில பழனி மலை ஏறிட்டாரு.

கே.பி.சுந்தராம்பாள் அம்மா அடிவாரத்தில் இருந்து “பழம் நீ அப்பா”ன்னு பாடத்தொடங்கிட்டாங்க.

-------------------------------------------------------

இந்த கேள்விகளுக்கு சரியாக பதிலளிக்கும் இரண்டு பேருக்கு, வ.வா.ச எனக்கு கொடுக்கும் பரிசில் இரண்டு சதவீதம் (2%) பகிர்ந்து அளிக்கப்படும்.

1. இந்த கதையில் எத்தனை தமிழ் பதிவர்கள் பெயர் நேரடியாக கூறப்பட்டிருக்கிறது? என்னென்ன பெயர்?
2. இந்த கதையில் எத்தனை தமிழ் பதிவர்கள் பெயரின் சுருக்கம் சந்தடி சாக்கில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது? என்னென்ன பெயர்?

4 comments:

Anonymous said...

Test Message

திகழ்மிளிர் said...

:))))))))))))))

ambi said...

சூப்பரா இருக்கு. :)))

ஏவிஎஸ் said...

அபாரமான நகைச்சுவைக் கதை. இந்த வகையில் நிறைய எழுதுங்க.