சமீபத்தில ஒரு பதினஞ்சு வருஷத்துக்கு முன்னால, நான் (கொஞ்ச காலம்) படிச்ச தொடக்கப் பள்ளியோட பொன் விழா வந்தது. தடபுடலா நடத்தனும்னு என்ணத்தில நெறைய நிகழ்ச்சிகள் ஏற்பாடு செஞ்சாங்க. ஏதாவது ஒரு நாடகம் போடனுமே.. அப்போ அந்த பள்ளியில படிச்சு உள்ளூரிலேயே வெட்டியா இருந்த கொஞ்சம் இளைஞர்களிடம் ஒப்படைக்கப்பட்டது அந்த பொறுப்பு.
அந்த கொஞ்சம் இளைஞர்கள் வேற யாருமில்லை.. நாங்கதான். என்ன நாடகம் போடலாம்னு யோசிச்சு யோசிச்சே பாதி நேரத்தை வீணடிச்சிட்டோம். இன்னும் ஒரு ரெண்டு கிழமை மட்டுமே இருக்கற தருவாயில, எப்படியோ ஒரு எஸ்.வி.சேகர் நாடகத்தை உல்ட்டா பண்ணி நடிக்கறதுன்னு முடிவாகியாச்சு. உல்ட்டான்னா அந்த நாடகத்தில இருந்து நமக்கு புடிச்ச ஒரு நாலஞ்சு சீன் மட்டும்.. அவ்ளோதான்.
அந்த நாலஞ்சு சீன்லயும், ஏகப்பட்ட கேரக்டர். அதிலயும் ஒண்ணு டிராமாக்குள்ள டிராமா போடற மாதிரி காட்சி. அதுக்காக ராஜா வேஷம் எல்லாம் கட்டி அரசவை செட் எல்லாம் போடணும். முதல்ல ஒவ்வொருத்தருக்கா கேரக்டர் கொடுத்தோம். ஹீரோ கேரக்டரில் நடிக்க நான், நீன்னு போட்டி இருக்கும்னு பாத்தா.. யாருமே ஹீரோவா நடிக்க முன் வரலை.
ஹீரோன்னா நிறைய வசனம் மனப்பாடம் பண்ணனும், சும்மா வந்தமா, ஜாலியா நடிச்சமான்னு இருக்க முடியாதுன்னு எல்லாரும் எஸ்கேப். சரின்னு எப்படியோ பேசி புலவரை (பட்டப் பெயர்தான், ஒரிஜினல் பேரு செந்தில்) ஹீரோவாக்கிட்டோம். எல்லாருக்கும் ஒவ்வொரு கேரக்டர் கொடுத்தும், நிறைய கேரக்டர் மிச்சமா இருந்திச்சு. இதுக்கு மேல நாம மட்டும் இருந்தா ஆள் பலம் போதாதுன்னு, தெரிஞ்ச இன்னும் கொஞ்சம் பழைய மாணவர்களையும் புடிச்சிக்கிட்டோம். அப்பவும் தேறலை.
கடைசியா ஒவ்வொருத்தருக்கும் ரெண்டு வேஷம்னு முடிவாயாச்சு. ஆனா, ஹீரோ, ஹீரோவோட அம்மா, அப்பா வேஷத்தில நடிக்கறவங்க ஒரு வேஷம்தான் போட முடியும். மத்தபடி பால்காரன், போஸ்ட்மேன், நண்பன் 1, நண்பன் 2, மந்திரி, காவலாளி, சேவகன், பக்கத்து வீட்டுக்காரர், ஜோசியக்காரர்னு ஒண்ணு ரெண்டு சீன்ல மட்டும் வரவங்க கூடுதலா வேஷங்கள் போடணும்னு முடிவாச்சு.
அப்படி கொடுத்து, கொடுத்து நிறைய பேரு நாலு, அஞ்சு கேரக்டர் பண்றா மாதிரி ஆய்டுச்சு. அதிகபட்சமா “ஜம்பு” ஏழு கேரக்டர் போட்டு சாதனை படைச்சான்.. அந்த ஏழு கேரக்டர்லயும் அவன் மொத்தமா எட்டு வார்த்தைதான் பேசினான். அதிலும் ஜோசியக்காரரா வேஷ்டி கட்டி வரும் அதே சீனில கொஞ்ச நேரத்தில போலீஸ்காரரா காக்கி உடையில வந்தது மறக்க முடியாது. தசாவதாரத்துக்கு ஒரு மூணு கம்மி. ஆனாலும் சாதனைதானே.
ஆனா, இப்போ அவன் சாதனை முறியடிச்சாச்சுன்னு தெரிஞ்சதும் கொஞ்சம் கவலையா இருக்கு. இந்த முறை ஊருக்கு போகும்போது அவனை கட்டாயம் பாத்து ஆறுதல் சொல்லணும்.
Wednesday, June 18, 2008
தசாவதாரம் - பல ஆண்டுகளுக்கு முன் பள்ளி விழாவிலேயே..
Subscribe to:
Post Comments (Atom)


5 comments:
//ஆனா, இப்போ அவன் சாதனை முறியடிச்சாச்சுன்னு தெரிஞ்சதும் கொஞ்சம் கவலையா இருக்கு. இந்த முறை ஊருக்கு போகும்போது அவனை கட்டாயம் பாத்து ஆறுதல் சொல்லணும்.//
ஹி ஹி ஹி சிவாஜி நவராத்திரியிலே முறியடிச்சுட்டாரே :-))))
அவ்வ்வ்வ்... முடியல...
நீங்க என்ன வேடம் போட்டிங்கனு சொல்லலையே...
வாங்க கிரி
//ஹி ஹி ஹி சிவாஜி நவராத்திரியிலே முறியடிச்சுட்டாரே :-))))//
என்னங்க இப்படி போட்டு உடைச்சிட்டீங்களே.. சரி கடந்த "இருபத்தைந்து ஆண்டுகளில் ஒரே படைப்பில் அதிக வேஷம் கட்டியவர்" அப்படீங்கற சாதனைன்னு வச்சிக்கலாம்.. :)))
வாங்க விக்னேஷ்
வீடு மாறினதும் பின்னூட்டமா போட்டு தள்றீங்களே..
//நீங்க என்ன வேடம் போட்டிங்கனு சொல்லலையே...//
நாந்தாங்க ஹீரோவோட அப்பா. அதுக்காக கண்மையில மீசை எல்லாம் வரைஞ்சு, அது வேர்வையில கரைஞ்சு ஒரு நீக்ரோ அப்பா மாதிரி நடிச்சது ஒரு தனி கதை..
நீங்கதான் புது வீட்டும் பக்கம் தலை காமிக்க மாட்றீங்களே...
Post a Comment