ஜீயேவின் இருபத்தேழு ரூபாய் பதிப்பின் தயவில், பொங்கல் திருநாள் முழுதும் ஸீரோ டிகிரியில் மூழ்கினேன். சாருவின் தீவிர ரசிகர்கள் புண்ணியத்தில் எதிர்பார்ப்பு அதிகமாகவே இருந்தது. ஆனால், அதை பூர்த்தி செய்ததா எனக் கேட்டால்..?
ஸீரோ டிகிரியின் அத்தியாயங்களை நாலே நாலு வடிவங்களுக்குள் அடக்கி விடலாம்
ஒன்று:
எழுத்தாளரின் விஷய ஞானத்தையும், அறிவுஜீவித்தனத்தையும் “பிலிம்” காட்டும் அத்தியாயங்கள். படிக்கும்போதும் சரி படித்து முடித்தபின்னும் சரி மனதில் கொஞ்சம் கூட ஒட்டவே ஒட்டாதவை. ஒருவேளை சாருவின் Intellectual Plane'ஐ என்னால் தொட முடியாததால் இப்படி இருந்ததோ என்ற எண்ணமும் எழுந்தது.
இரண்டு:
வாசகரை குழப்பி, “ஆஹா, இதில ஏதோ விஷயம் இருக்குது போலருக்கு”, என்று எண்ண வைக்க வேண்டும் என்பதற்காகவே எழுதப்பட்டது போல தோண்றும் சில குழப்ப மயமான அத்தியாயங்கள். இவற்றை படிப்பதே வீண், அப்புறம் எங்கே மனதில் ஒட்டும்.
மூன்று:
தொல்லைக்காட்சி மெகாசீரியல்கள் தோற்றுப்போகும் அளவுக்கு, பட்ட காலிலேயே பட்டு துன்பத்தின் எல்லையே தொடும் பெண் கேரக்டர்களின் மெகா எரிச்சலூட்டும் புலம்பல்கள். ஆர்த்தி கதை மற்றும் அவந்திகா கடிதங்களை கொஞ்சம் லக்ஷ்மி, ரமணி சந்திரன் மொழியில், நடையில் ஒரு “சுபமான” முடிவுடன் தனி நாவலாக வெளியிட்டிருந்தால், எழுத்தாளருக்கு பெண் ரசிகைகள் குவிந்திருக்கலாம்.
நான்கு:
மேற்கூறிய மூன்றையும் மீறி, வாசிக்கும்போது அதிர்ச்சி, ஆத்திரம், சிரிப்பு, நெகிழ்ச்சி என்று ஏதாவதொரு உணர்வைத் தந்து, புத்தகத்தை மூடிய பின்னும் மனதில் கொஞ்சமாக வட்டமிடும் வெகு சில அத்தியாயங்கள். ஃபக்ருன்னிஸா கதை, தாயுமானவனின் Concentration Camp ரக கொடூரங்கள், எழுத்தாளர் மகளுக்கு எழுதும் கடிதங்கள், காவல் நிலையத்தில் நடக்கும் காவலர் மற்றும் "தோழருடனான" எழுத்தாளரின் உரையாடல் போன்றவை.
படிக்கும்போது என் மனதுக்கு தோன்றிய இன்னொரு எண்ணம், Conventional விதிப்படி Logic ஓட்டை இல்லாமல், அத்தியாயங்களுக்குள் சரியான தொடுப்பு கொடுத்து எழுதுவதுதானே கடினம்.. இது போல எதைப் பற்றியும் கவலைப்படாமல் Non-Linear (என்ன எழவோ) விதியில் எழுதுவது அதைவிட சுலபம்தானே.
மொத்தத்தில், ஸீரோ டிகிரி என் பார்வையில் சிலாகிக்க வேண்டிய ஒரு நாவலும் அல்ல, எதிர்க்க வேண்டியதும் அல்ல. “புரட்சி” என்று பிரமிக்கவும் முடியாது. “குப்பை” என்று ஒதுக்கவும் முடியாது.
பி.கு: இது எனது முதல் வாசிப்பில் எனக்கு ஏற்பட்ட அனுபவமே. சில நாட்கள் கழித்த மற்றுமொரு வாசிப்பில் புரிதல்கள், எண்ணங்கள் வேறுபடலாம்..
Friday, January 16, 2009
சாருவின் “ஸீரோ டிகிரி” - என் பார்வையில்
Subscribe to:
Post Comments (Atom)


7 comments:
நீங்கள் சொல்லியிருப்பது சரிதான்.சில ஆண்டுகளுக்கு முன்பு,ஆன்லைன் வழியாக 'ஜீரோ டிகிரி' மின்பதிப்பை வாங்கி படித்தேன்.ஒன்றுமே புரியவில்லை.ஒரே கெட்டவார்த்தை களமாக இருந்ததைப் பார்த்து அதிர்ந்துப்போய் மூடிவிட்டேன்.இன்றுவரை அதை மீண்டும் படிக்கும் தைரியம் வரவில்லை.அண்மைக்காலங்களில் சாருஆன்லைன் படித்துக்கொண்டிடுப்பதால்,விரைவில் ஒரு மறுவாசிப்புக்கான வாய்ப்பு மங்கலாக வெ...........கு தொலைவில் தெரிகிறது...பார்க்கலாம்.
வாங்க மோகன்.. நன்றி.
//ஒரே கெட்டவார்த்தை களமாக இருந்ததைப் பார்த்து அதிர்ந்துப்போய் மூடிவிட்டேன்//
எனக்கு அதிர்ச்சி வரவில்லை. சில இடங்களில் அந்த மொழி நாவலுக்கு பலம்.. சில இடங்களில் வேண்டுமென்றே சேர்க்கப்பட்டது போன்றதொரு என்ணம்...
//விரைவில் ஒரு மறுவாசிப்புக்கான வாய்ப்பு மங்கலாக வெ...........கு தொலைவில் தெரிகிறது...பார்க்கலாம்//
ஆல் த பெஸ்ட்..
கயமை
உங்கள் பின்னூட்டத்தை வெளியிட முடியாமைக்கு வருந்துகிறேன் Power Bala
நீங்களே காசு கொடுத்து அதை வாங்கிப் படிக்கலாமே.. :)
//நீங்களே காசு கொடுத்து அதை வாங்கிப் படிக்கலாமே.. :)//
நிச்சயமா..!! ஆனா 2 பிரச்சனை....!
1. இப்ப இந்த ebook கிடைக்கிற ஒரே இடம், சாரு-வோட site மட்டும்தான்.
2. ஆனா.. credit card option இல்லாம இருக்கு.
மோகன் எங்க வாங்கினார்னு கேட்டு இருக்கலாம். என்னோட தப்பு..!
மூணாவதா.. ஒரு point..!!
புத்தகமா வாங்கலாம்னு பார்த்தா.. புத்தக விலைய விட 2 மடங்கு shipping charge.
NRI பொழப்பு...!!!! :-(
//பி.கு: இது எனது முதல் வாசிப்பில் எனக்கு ஏற்பட்ட அனுபவமே. சில நாட்கள் கழித்த மற்றுமொரு வாசிப்பில் புரிதல்கள், எண்ணங்கள் வேறுபடலாம்..//
பின் பாதிப்புகளை தவிர்க்க இப்படி ஒரு பிட்ட போட்டதா கிசுகிசு பேசுறாங்க...
Post a Comment