Thursday, July 16, 2009

ஓடும் அன்னை, துரத்தும் தந்தை, அய்யோ பாவம் குழந்தை

சினிமா கதை தோற்கும் அளவுக்கு இருக்கு இந்த நிஜக்கதை. தன் குழந்தையை அப்பா தீவிரமா தேடறாரு. ஆனா, அம்மா அந்த குழந்தையோட ஒரு "Fugitive" ஸ்டைலில ஓடறாங்க. இடம் மாத்தி இடம், நகரம் மாத்தி நகரம். சென்னை, டில்லி, உ.பி, கர்நாடகான்னு எல்லா போலீசும் தேடியும் கிடைக்கலையாம். அடேங்கப்பா.. என்னா ப்ளானிங். ப்ளானிங்கா இல்ல போலீசோட தெறமை இவ்ளோதானா?

இத்தனைக்கும் அந்தம்மா எங்க எப்போ இருந்தாங்க.. எப்பல்லாம் வங்கியில பணம் எடுத்தாங்க, எந்த ஸ்கூலில மகனை (கொஞ்ச நாள்) படிக்க வைச்சாங்க அப்படீங்கற விவரமெல்லாம் கிடைச்சிருக்கு. ஆனா பிடிக்க முடியலை. அப்பாவோ, பையனுக்காக பாட்டெல்லாம் பாடி அதை வெப் தளத்தில வேற போட்டு வச்சிருக்காரு.. டாக்குமென்டரி எல்லாம் கூட.. என்னதான் நடக்குது?

ஜெயஸ்ரீ, ரவி சந்ரன் ரெண்டு பேர்க்கும் அமெரிக்காவில பிறந்த குழந்தைதான் ஆதித்யா. ஆனா, அவன் பிறந்த கொஞ்ச நாளிலயே திருமணத்துக்குள்ள பிளவு. அமெரிக்கா கோர்ட்டுக்கு போறாங்க. அங்க ஒரு டீடெய்லு கஸ்டடி ஆர்டர் போடறாங்க. என்னா டீடெய்லு.. அப்பப்பா.. பையன் எப்பெப்ப யார் கூட இருக்கணும், எப்போ அவனை வெக்கேஷன் கூட்டிட்டு போகலம், ரெண்டு பேரும் ஒரே நாட்களில வெக்கேஷன் கூட்டிட்டு போக ஆசைப்பட்டா, Odd (ஒற்றை எண்) ஆண்டில அம்மாவும், Even (இரட்டை எண்) ஆண்டில அப்பாவும் தேர்வு செய்ற தினங்கள்தான் செல்லுபடியாகும்.

லேபர் டே அப்பாகூட, ஹேலோவின் அம்மா கூட, வெட்டெரன்ஸ் டே அப்பாகூட, பொங்கல் அம்மாகூட இப்படீனு பல பக்கங்கள் போகுது. ச்சே.. பேசாம அந்த குழந்தைக்காவது கூடி வாழலாம். என்ன ஒரு டார்ச்சர்..

அதுல அம்மா பையனை வருஷத்தில மூணு வாரம் இந்தியா கூட்டிப்போகலாம்னு ஒரு ஆர்டர் சொல்லுது. அங்கதான் ஆரம்பிக்குது ஆப்பு அந்த குழந்தைக்கு. 2005 ல இந்தியா கூட்டி வந்த அம்மா, திரும்ப அமெரிக்கா போகவே இல்ல. அங்க அப்பா பையனுக்காக வெய்ட்டிங். கொஞ்ச நாள் பாத்துட்டு பையன் திரும்பி வரலைன்னதும், அமெரிக்காவில ஒரு கம்ப்ளைன்ட் செய்றாரு. அப்பவும் ஒண்ணும் வேலைக்காகலை, உடனே சென்னையில கம்ப்ளைன்ட். அதுக்குள்ள அம்மா பையனோட வேற ஸ்டேட்டுக்கு எஸ்கேப். இப்ப்டியே போகுது கதை.

ஆனா அதுக்கெல்லாம் ஹைலட் என்னன்னா.. ஜெய்ஸ்ரீ ஒரு மனநோயாளி அப்படீன்னு குற்றம் சாட்டறாரு.. அதுக்கு அமெரிக்காவில குடுத்த ஒரு ரிபோர்ட்ட ஆதாரமா காட்டறாரு. ஆனா, அந்த ரிப்பொர்ட்ல என்ன சொல்றாங்கன்னா.. இவங்களுக்கு கொஞ்சமா பிரச்சினை இருக்கு. அதுக்கு கொஞ்சம் ட்ரீட்மென்ட் தேவைன்னுதான். ரவி சந்ரன் என்னடான்னா அந்த அம்மாவை mental, insane, legal terrorist அப்படீன்னு ஒரே பழிதான்.

அப்பாவின் புலம்பல், குழந்தை ஒண்ணரை வருஷமா ஸ்கூலுக்கு போகலை, அவனை அலைக்கழிச்சு சோர்வடைய செய்றாங்க, அவனுக்கு அப்பாவை பத்தி ரொம்ப நெகட்டிவா சொல்லி குடுக்கறாங்க, அவன் அமெரிக்காவில ரொம்ப சொகுசா வாழ்ந்தவன், இப்போ ரொம்ப கஷ்டப்படறான்னு.

இப்போ பையனை தீவிரமா தேடுறாங்க. எவ்வளவு தீவிரமான்னா.. RESCUE ADITYA அப்படீன்னு வெப்சைட் வச்சு, அதை யாஹூவில விளம்பரம் குடுத்து.. நான் யாஹூ மெயில் செப் பண்ணும்போது இந்த விளம்பரத்தை பாத்துட்டு ஏதோ சுனாமியில காணாம போன பையன்னு நெனச்சேன். ஆனா, இவ்ளோ சீரியஸா இருக்கும்னு எதிர்பார்க்கல.

இப்பா அந்த அம்மாவை அவங்க சொந்த குடும்பமே கை கழுவிடுச்சு. ஆமாம் ஜெய்ஸ்ரீயோட அப்பா, "எனக்கும் அந்த பொண்ணுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை" அப்டீன்னு போலீஸ்லயும் கோர்ட்லயும் சொல்லிட்டாரு.

இது எல்லாம் ஒரு பக்க ஸ்டோரிதான். மற்ற பக்கத்தை, ஊர் விட்டு ஊர் மாறும் அம்மாதான் வந்து சொல்லணும். அவங்க தரப்பு நியாயங்களை (அப்படி ஏதாவது இருந்தா). உண்மையில கல்யாணம் செஞ்சு அவங்க வாழ்ந்த வாழ்க்கையில என்ன நடந்ததுன்னு யாருக்கும் தெரியாது. அந்த பொன்ணு இப்படி ஆனதுக்கு காரணம் என்னன்னும் வெளியிலருந்து யாராலயும் சொல்ல முடியாது. எல்லாத்துக்கும் முழுமுதல் காரணம் யாருன்னும் தெரியாது. கொஞ்சம் ஓவர் பெர்சனலா போய்ட்டேனா.. ஒக்கே இப்போ ஜெய்ஸ்ரீ கையிலதான் எல்லாம் இருக்கு.

இதையெல்லாம் ஏன் இவ்ளோ எழுதறேன்னு நெனக்கிறீங்களா? எல்லாம் அந்த ஒரு பாவமும் அறியாத பச்ச மண்ண நெனச்சுதான். என்னா பாடுபடும் அந்த பிஞ்சு.. ஊர் ஊரா அலைஞ்சு.. ஸ்கூல் போக முடியாம.. அம்மாவைத் தவிர வேர யாரையும் பாக்காம.. அய்யோ பாவம் குழந்தை

7 comments:

RATHNESH said...

குழந்தையின் தாயின் பக்கம் என்ன என்று தெரியாமல் ஒரு முடிவுக்கும் வர முடியவில்லை. குழந்தை பாவம் என்கிற பரிதாப உணர்வு மனதைப் பிசைவது நிஜம்.

seidhivalaiyam.in said...

Hi

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை எங்களது தமிழ் இணையமான www.seidhivalaiyam.inல் பதித்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பதித்துக்கொள்ள இந்த தமிழ் இணையத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.

நட்புடன்
செய்திவளையம் குழுவிநர்

PPattian : புபட்டியன் said...

நன்றி ரத்னேஷ்.

கண்டிப்பாக.. எந்த ஒரு சச்சரவிலும் குறைந்தது இரண்டு பக்கங்கள் உண்டு... பெரியவர்கள் சண்டையில் எப்போது குழந்தைகள்தான் அவஸ்தைப்படுகிறார்கள்.

மதிபாலா said...

I am not a preacher. I am not here to change people’s lives. I am not here to set people in right (whatever) path. I have no right to correct other people’s action. Therefore, let others think, act and live the way they want to. I am not here to change perception of people. I do not get into arguments. I do not advice, when not requested. I am not perfect. I am no greater than others. I am a human being just like anybody else is. Therefore, I live and let live//

இதுவே ஒரு கதை சொல்கிறது...புதுவிதமான பிலாஷபியும் கூட...

PPattian : புபட்டியன் said...

நன்றி மதிபாலா.. ஆனா இதையும் சேத்துதான் படிக்கணும்

Well, this is a resolution that I constantly make and constantly break.

:)

தேவன் மாயம் said...

குழந்தைக்காக
எழுதியது
ரொம்ப
நெகிழ்ச்சியாக
உள்ளது!!

PPattian : புபட்டியன் said...

நன்றி தேவன் மாயம். ஏனோ குழந்தைக்காக எழுதணும்னு தோணிச்சு...