நெல்சன் மாணிக்கம்
காமத்தின் சாலையில் வானவில்
ரசபாசங்களில் ராமன் வில்
வளைப்பவர் வலையில் விளையும்
சளைப்பவருக்கு களையும்
நெல்சன் மாணிக்கத்தின் காட்சிப்பொருள்
விளையும் பயிரின் லகரம் காண
நேர்த்தியற்று மனம்பிறழ்ந்து
ரஹஸ்ய தொலைவில்
அறுபது பத்து.. வருமா
இல்லை.. முப்பது நூறு
சரி.. எண்பது பத்து
அரை மூன்று ஆயிரமாவது..
சுள்ளென தலைக்கேறி பரம்பரை பலியாக
தள்ளென தள்ளி வசவு வெளிவர
கல்லும் மண்ணும் காற்றில் பறக்க
பல்லாவது தப்பிட விர்ரென முறுக்கு
--------------------------
கடைசியில் "அது என்ன?" அப்டீன்னு முடிச்சிருக்கணுமோ :)
--------------------------
கொஞ்சம் கொசுறு கவுஜைகள்
பூக்கோலம்
சாலை எங்கும்
சிரித்தது பூக்கோலம்
சற்றுமுன் நடந்த
சாவு ஊர்வலம்
எத்தனை எத்தனை
அறுபதில் வந்தேன்
விழுந்தது சிவப்பு
எத்தனை எத்தனை
போக்குவரத்து சமிக்ஞைகளில்
விரயமாகும் மனித நேரங்கள்
என்னவெல்லாம் செய்யலாம்
அத்தனையும் சேகரித்து
கோலங்களில் தேவயானியோ
நீயா நானாவில் வெட்டிப்பேச்சோ
அல்லது
பத்தாயிரமாவது முறையாக
கண்டேன் காதலை விளம்பரம்
படம் உபயம்: ஹம்ரிட்டாவின் மௌஸ்வண்ணம்
Tuesday, December 1, 2009
நெல்சன் மாணிக்கம் - உரையாடல் போட்டிக்காக
Subscribe to:
Post Comments (Atom)


20 comments:
எத்தனை எத்தனை நன்றாக இருக்கு.
-வித்யா
நன்றி வித்யா.
நல்லா இருக்குங்க.வெற்றி பெற வாழ்த்துக்கள்!
நன்றாக இருக்கிறது வெற்றி பெற வாழ்த்துக்கள்...
நன்றி பா.ராஜாராம்
நன்றி கமலேஷ்
காமம் - இதனை அழகான ஒன்றா
இல்லை - உங்கள் எழுத்துக்களில் மின்னுகிறதா..?
பூவும் சாவும் அருமை..!
காலம் கழியுது கண்முன்னே
வெறும் தொலைகாட்சிக்கா
இதனை முன்னே..!
அதனையும் அருமை நண்பரே...
அன்பன் சக்தி..
நன்றி சக்தி.. வருகைக்காகவும்.. அழகிய கவிதை போன்ற உங்கள் பின்னூட்டத்துக்காகவும்.
வெற்றி பெற வாழ்த்துக்கள்
நல்லா இருக்கு பூவும் சாவும்
வெற்றி பெற வாழ்த்துக்கள் நண்பரே
பட்டியன் பேரே அதுதானா
நன்றி S.A. நவாஸுதீன்
----------------
நன்றி தேனம்மை லக்ஷ்மணன்
உங்கள் கவிதையெல்லாம் இன்னைக்குதான் பார்த்தேன்.. அப்பப்பா.. அருமை.. ஒவ்வொண்ணா படிக்கணும்.
// சுள்ளென தலைக்கேறி பரம்பரை பலியாக
தள்ளென தள்ளி வசவு வெளிவர
கல்லும் மண்ணும் காற்றில் பறக்க
பல்லாவது தப்பிட விர்ரென முறுக்கு//
நல்லா இருக்கு..
வெற்றி பெற வாழ்த்துகள்!!!!
நன்றி முகமூடியணிந்த பேனா!!
எப்படி.. இப்படி ஒரு புனைப்பெயர் தேர்ந்தெடுத்திருக்கீங்க... :)
ஆஹா கையை கொடுங்க
நம்ம திருச்சிகாரரா?
வாழ்த்துக்கள்
விஜய்
வருகைக்கு நன்றி கவிதை(கள்)
//நம்ம திருச்சிகாரரா?//
எப்டி விஜய் கண்டு பிடிச்சீங்க??
கவிதை என் சிறுமூளையை கசக்கிப் போட்டு விட்டது. மிகவும் நன்றாக உள்ளது. வெற்றி பெற வாழ்த்துக்கள் !
//கவிதை என் சிறுமூளையை கசக்கிப் போட்டு விட்டது. //
இதுபோல ஒரு பின்னூட்டத்தை எதிர்பார்க்கவே இல்லை.. :) மிக்க நன்றி அரவிந்தன்
வாழ்த்துக்கள்
நன்றி தியாவின் பேனா
உங்கள் சோக தாலாட்டும் அருமை. வாழ்த்துகள்
வெற்றி பெற வாழ்த்துகள்!
நன்றி நாவிஷ் செந்தில்குமார்
Post a Comment