வாய் இருந்தா அழுதிடும் என் வீட்டு TV. பின்ன.. சாயங்காலம் ஆறரை மணியிலருந்து மறுநாள் அதிகாலை ஒரு மணி வரை நான்ஸ்டாப்பா படம் பார்த்தா.. அதுவும் ஒரே சேனலில்...
மூன்று அருமையான உலகப்படங்கள் பார்க்கக் கிடைத்தது..
----------------------------------
முதலில் “Eye in the Sky” என்று ஒரு கேன்ட்டோனிஸ் (Cantonese, 2007) படம். முழுதும் ஹாங்காங்கின் SU எனப்படும் Survellence Unit செய்யும் துப்பறியும் செயல்கள் குறித்த படம். படத்தின் முதல் ஆறு நிமிடங்கள் ஹாங்காங்கின் தெருக்களில் சில ஆசாமிகளை மாற்றி மாற்றி காண்பிக்கையில், அது ஹீரோவா, வில்லனா இல்லை குஷி படத்தின் SJசூர்யா போல கதைக்கு சம்பந்தமில்லாத ஆட்களா என தெரியாத ஒரு த்ரில் இருக்கிறது. அதற்குப்பின் ஒரு நகைக் கடைக் கொள்ளையில் ஆரம்பிக்கும் கதை, கடைசி வரை சுவாரசியம் குன்றாமல் படு ஸ்பீடாகப் போகிறது.
பல இடங்களில் அவர்கள் உளவு பார்க்கும் விதம் திகைக்க வைக்கிறது. கற்பனை பண்ணிப் பாருங்கள், நீங்கள் தெருவில் நடக்கும்போது உங்கள் முன் கல்லூரி மாணவி போல நடந்து வரும் பெண் உங்களை வேவு பார்ப்பவராக ஒருக்கலாம். அது மட்டும் இல்லை, அவர் அந்த தெருவின் அடுத்த பக்கத்தில் நடந்து செல்லும் ஒரு வயதானவரோடு உங்களைப் பற்றிய தகவல் பரிமாறிக் கொண்டிருக்கலாம். சந்தேகம் என்று வந்தபின் உங்கள் வீட்டு குப்பை (Garbage) கூடக் கிளறப்படலாம்.
Training Day என்ற படத்தில் வருவதைப் போலவே இதிலும் தன் முதல் நாள் வேலை தரும் திருப்பங்களை தன் அதிகாரியுடன் சந்திக்கும் கதை என்றாலும் இது வேறு தளத்தில் தனித்து தெரிகிறது. கொஞ்சமாக நம்ம "அஞ்சாதே"வையும் ஆங்காங்கே ஞாபகப்படுத்துகிறது.
----------------------------------
இரண்டாவதாக “Three Colours White” என்ற போலந்து (Polish, 1994) படம். பாரிஸில் ஒரு நீதிமன்றத்தில் ஆரம்பிக்கிறது படம். தன் பிரெஞ்சு மனைவியால் விவாகரத்து செய்யப்பட்டு, கைவிடப்பட்டு, அனாதையாய், மொழி புரியாத ஊரில், இரவில், ஒரே பெட்டியான உடைமையோடு, குளிரில் (ஆங்.. நள தமயந்தி சாயல்.. அதே) தவிக்கிறான் நாயகன். பின் எப்படி தன் சொந்த நாட்டுக்கு திரும்பிப் போகிறான், எப்படியெல்லாம் பணம் சம்பாதிக்கிறான், எப்படி தன் (முன்னாள்) மனைவியை திரும்பப் பெறுகிறான் என்பதுதான் படம்.
ஷூவையும், பெல்ட்டையும் கூட கழற்றி சோதித்தே விமானத்துக்குள் அனுப்பும் இந்தக் காலத்தில் இருந்து பார்க்கும்போது, வார்சாவுக்கு நாயகன் திரும்பிப் போகும் ஐடியா சிரிப்பை வரவழைத்தாலும், 1994ல் அது நிதர்சனமாக இருந்திருக்கலாம். கதையில் வரும் கொஞ்ச நஞ்ச தொய்வுகளையும் தன் குழந்தைத் தனமான முகத்தாலேயே சரிக்கட்டியிருக்கும் நாயகன் படம் முடிந்தும் நெஞ்சில் நிற்கிறார். அதேபோல அந்த வயலின்களும், புல்லாங்குழலும் இழையோடும் பிண்ணனி இசையும்.
----------------------------------
மூன்றாவதாக நான் பார்க்கக் கிடைத்த்து ஒரு ஸ்பீல்பெர்க் படம். ஷின்ட்லர்ஸ் லிஸ்ட் என்று இரண்டாம் உலகப்போரின் கொடுமைகளில் நெஞ்சைத் தைக்க வைத்து, தேடித் தேடி உலகப்போர் குறித்து படிக்க வைத்த அதே ஜீனியஸின் உலகப்போர் தொடர்பான இன்னொரு படைப்பு. இது schindler's list க்கு ஆறு வருடங்கள் முன்னால் (1987) வந்த "Empire of the Sun".
1937 - 1945 ல் சீனாவை ஜப்பான் ஆக்கிரமித்து கொன்று குவித்தபோது, அங்கு வாழ்ந்த பிரிட்டன் மற்றும் அமெரிக்க நாட்டவர்களின் வாழ்க்கையை, போரின் கலேபரத்தில் தன் பெற்றோரை பிரிந்து அல்லாடும் ஒரு சிறுவன் வாயிலாக சொல்கிறார் இயக்குநர்.
கலவரம், சிறுவன், பெற்றோரைப் பிரிதல், சிறுவன் தெருவில் அலைதல், வெறிச்சோடும் தன் வீட்டுக்கு தனியே திரும்பி வருதல் என கொஞ்சமாய் “பம்பாய்” (Bombay) வாடை!!!
தன் பெற்றோரை விட்டு பிரிந்தபின், போகும் இடமெல்லாம் ஜப்பானியர்களிடம் "I Surrender" சொல்வதும், தான் இருக்கும் கேம்ப்பில் ஒவ்வொருவருக்கும் ஓடியாடி உதவுவதும், ஜப்பானிய கேப்டன் மருத்துவரை அடிக்கும்போது மன்றாடுவதும், இறந்த பெண்ணின் நெஞ்சை அழுத்தி அவள் கண்கள் அசையும்போது (pumped blood into brain momentarily?) குதூகலிப்பதும், தன் ஜப்பானிய நண்பன் கொல்லப்பட்டவுடன் ஆத்திரப்படுவதும், காவலர்களுக்கு தெரியாமல் கேம்ப்பின் முள்வேலிக் கம்பிக்கு வெளியே சென்று வந்து அமெரிக்க ஆடவர் கூடரத்தில் கம்ப்பீரமாக நிழைவதும், கடைசியில் எந்த சலனமும் இல்லாமல் தன் தாயின் தோளில் சாய்வதும் என அந்த சிறுவனுக்கு இது முதல் படமென்பதை நம்ப மறுக்கிறது மனம்.
விமானங்கள் மீது காதலுடன் அலையும் சிறுவன் (ஐந்து வயது முதல் கார் மீது அமோக காதல் கொண்டு, வளர்ந்து பெரியவனாகியும் விளையாட்டு -Toy கார் சேகரிப்பில் இருக்கும் என் தம்பி கோபி நினைவு வந்து போனது) பின்னாளில் ஒரு போர்க்கைதியாக அடைபட்டிருக்கும் சிறையின் மீது அமெரிக்க விமானங்கள் குண்டு மழை பொழியும்போது அதற்காக துள்ளிக் குதித்து ஆனந்தப்படும்போது பரிதாபம் மிஞ்சுகிறது. அதன் பின்னே "எனக்கு என் பெற்றோரின் முகம் மறந்து விட்டது" என அழும்போது நம் மனமும் கரைகிறது.
----------------------------------
மொத்தத்தில் "எவ்ளோ நேரம் அந்த TV ஓடுது”.... “ஆஃப் பன்ண்ணிட்டு வந்து படுங்க”.. “அப்படி என்னா அதுல ஓடுது”.. “இந்த படத்த எப்படியும் இன்னும் பத்து முறையாவது போடுவான்”.. “நாளைக்குப் பாத்துக்கலாம் வாங்க”... “இப்டி பாத்தா கண்ணு கெட்டுப்போவாது”... “அப்டி தூங்காமக் கூட என்ன படம் வேண்டிக் கிடக்கு”.. “ச்சே இப்டியும் கூட இருப்பாங்களா”.. “எக்கேடோ கெட்டு போங்க” போன்ற ஒரு காதில் வாங்கி, இன்னொரு காதில் விட்ட வசனங்கள் போக அது ஒரு முத்தான பொழுதாகக் கழிந்தது.
கடைசியா, இது மூணும் எப்படி உலகப் படம் ஆகும்னு கேட்போருக்கு!!!... இந்த படங்களை ஒளிபரப்பியதே UTV World Movies தான்.. சன் டைரக்ட் இருப்பின் இது 414 என்ற சேனலில் தெரியும்.


14 comments:
ஆகா அருமை
All r fine PPATTIYAN
athai vida ungka wife comments simply superb
:-)))))
நன்றி தியாவின் பேனா
நன்றி தேனம்மை ம்ம்.. அவ்வளவு கமெண்ட்டுக்கும் சலிக்காம பார்த்தேனே...!!!
//(ஆங்.. நள தமயந்தி சாயல்.. அதே//
நள தமயந்தி Green Card பாத்து எடுத்தது.
http://chinnaammini.blogspot.com/2008/06/blog-post_22.html
நன்றி சின்ன அம்மிணி.. உங்க பதிவுல அதே பின்னூட்டம் இதோ..
புரிஞ்சுது..
Green Card முழுக்க நள தமயந்தி.
Three Colours White.. கொஞ்சமாய்...:)
ஆக கமல் நள தமயந்தியை உருவிய இடத்தை கண்டுப் பிடித்து விட்டீர்கள். பின்னணியில் ஒலித்த வசனங்கள் அருமை. உங்கள் மீதான அக்கறை தெரிகிறது வாழ்த்துக்கள்
வருகைக்கு நன்றி தர்ஷன்
உங்களின் பகிர்வுக்கு நன்றி நண்பரே..
பதிவு மிக்க அழகு வாழ்த்துக்கள்..
//நன்றி தேனம்மை ம்ம்.. அவ்வளவு கமெண்ட்டுக்கும் சலிக்காம பார்த்தேனே...!!!//
ஹா ஹா ஹா நிஜமாவே நெஞ்சுறுதியான ஆள்தான் நீங்க
நல்ல பகிர்வு நண்பரே.
நன்றி நாடோடி இலக்கியன்
என் பல இடுகைகளிலும் உங்கள் பின்னூட்டங்களைப் பார்த்தேன். மகிழ்ச்சி.. ரொம்ப ரொம்ப தேங்க்ஸ்..
நன்றி கமலேஷ்
தேனம்மை: ம்ம்.. நெஞ்சுறுதியெல்லாம் ரொம்ப கம்மிங்க எனக்கு.. படம் த்ந்த சுவாரசியத்தில அப்டி ஆய்டிச்சி..
அருமையான விமர்சனம் மற்றும் திரைப்படங்களை பற்றிய நல்ல அறிமுகம்.
ஸ்பீல்பெர்க் எனக்கு ரொம்ப பிடித்த இயக்குனர்..
அவரோட எல்லா படங்களையும் ஒன்று விடாமல் பார்த்து வருபவன்.
நன்றிகள் பல.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி குமரன்.
Post a Comment