கிராமத்துப் பொங்கல்
சிறுநகரத்துப் பொங்கல்
பெருநகரத்துப் பொங்கல்
மாநரத்துப் பொங்கல்
தைப் பொங்கல்
மாட்டுப் பொங்கல்
காணும் பொங்கல்
குழந்தைப்பருவ பொங்கல்
பதின்மப் பொங்கல்
வாலிபப் பொங்கல்
பேச்சிலர் பொங்கல்
குடும்பஸ்தப் பொங்கல்
ஹாஸ்டல் பொங்கல்
தனிமைப் பொங்கல்
குடும்பத்துடன் குதூகலப் பொங்கல்
வரிசையில் இன்று..
Yet Another பொங்கல்
வயல், மாடு, காடு, ஆடு இப்படி ஏதாவது வைத்திருக்கும் எல்லாரும் மாட்டுப் பொங்கல்தான் கொண்டாடுவார்கள். ஒரு ஆட்டுக்குட்டிக்கு கூட வழியில்லாத பிக்காளிகளாக நாங்கள் கிராமத்திலேயே புங்கம் பூவும், கரும்பும், மஞ்சக் கொத்தும் தேடித் தேடி சூரியப் பொங்கல்தான்.
ஆனாலும், ஆடு மாடெல்லாம் குளிப்பாட்டி, கொம்புக்கு நீலம், பச்சை, மஞ்சள், சிவப்பு என ஒரே கலரிலோ அல்லது ஒவ்வொரு கொம்புக்கும் ஒவ்வோரு கலர் அடித்து, உடம்பு முழுதும் வண்ண வண்ணமா பொட்டு வைத்து நடக்கும் களேபரம் பசுமை. அன்னைக்கு மட்டும் ஆடு மாடுக்கெல்லாம் புல் டே ரெஸ்ட்தான்.. அடுத்த மாட்டுப் பொங்கல் வரைக்கும் தேவையான அளவு.
மாட்டுப் பொங்கல் பொதுவாக மாலை வேளை, மாட்டுப் பட்டியில்தான். பொங்கல் பொங்கினதும்.. "பொங்கலோ பொங்கல்", என யாராவது பெருசு கத்த, சுத்து நிக்கும் சின்னப் பசங்க நாங்களெல்லாம், "பாபூஸ், கைபூஸ்" என்று கத்துவோம். அதற்கு அர்த்தம் என்னவென்று இன்னும் தெரியாது. இது எல்லா கிராமத்தில்யும் இருக்கான்னும் தெரியலை.
இப்படியே வீடு விடா கத்தி கத்தி.. விதவிதமான இனிப்புடன், லேசான மஞ்சள் நிறத்திலிருந்து அடர் பிரவுன் நிறம் வரை டிஸைன் டிஸைனா பொங்கலாலேயே வயிறு புடைத்து.. பாபூஸ், கைபூஸ்.
----------------------------------------------
நாமெல்லாம் பொங்கல் கொண்டாடும் இந்த நேரம் ஹைட்டியில் ஒரு லட்சம் பேர் இடிபாடுகளுக்குள் சிக்கி இல்லாமலே போய் விட்டார்கள். மீட்புப் பணி வழக்கம்போல மந்தம் என்று கவலைப் பட்டார்கள் டி.வியில் பேசின உயிர் பிழைத்திருக்கும் சிலர். இயற்கையின் அட்டூழியத்தை என்னன்னு சொல்றது.
----------------------------------------------
அந்த வெற்றிவேல் காணொளியையும் பார்த்தேன். கவலையளித்தது. ஆம்புலன்ஸ் வரும்னு 30 நிமிஷம் வெயிட் செய்தார்களாமே.. அங்க நின்ற கார்களில் ஒன்ணு கூட ஒடாதோ? முதல் நிமிஷத்திலேயே அந்த அமைச்சர் பெருமக்களில் யாராவது ஒருத்தர், "உடனே இருக்கிற ஏதாவது ஒரு காரில் ஏத்தி ஹாஸ்பிட்டல் கொண்டு போங்கப்பான்னு" சொல்லி மட்டும் இருந்தாலே போதும்.
----------------------------------------------
நேற்று சாலையிலே என் வண்டிக்குப் பக்கத்தில் ஒரு கார்... சாதாரண காரை ஏதேதோ வித்தையெல்லாம் செய்து ரேஸிங் கார் போல மாற்றியிருந்தார்கள். கார் உடல் முழுக்க ஒரே ஸ்டிக்கர் மயம். எல்லாம் கேள்விப்படாத பிராண்டுகள். அதில் உர்.. உர்ரென்று வித்தியாசமான சத்தம் வேறு. குண்டும் குழியுமான நம்மூர் ரோட்டில குதிச்சு குதிச்சு நாம வண்டி ஓட்டும்போது இந்த கூத்தெல்லாம் தேவைதானா என்று கருவும்போதே கார் என்னை ஓவர்டேக் செய்து.. அதன் முதுகில், "IF THIS IS TOO LOUD, THEN YOU ARE TOO OLD".. சர்த்தான்..
ரசித்த இன்னொரு வாகன வாசகம்
சாலை பார்த்தால் சமர்த்து
சேலை பார்த்தால் விபத்து
சாலையில் ஒருவரின் டீ-ஷர்ட்டில் பொடிசாக ஏதோ எழுதியிருந்தது. என்னவென்று கூர்ந்து பார்த்தேன்.. “I HATE PEOPLE WHO READ T.SHIRTS”, என்று எழுதியிருந்தது. தேவைதான் எனக்கு.
----------------------------------------------
கலைஞர் தொல்லைக்காட்சியில் குருவி பறக்கிறது. விஜயின் உடலுக்கு நேராய் நீட்டி நூறு முறையாவது சுட்டு விட்டார்கள். ஆனால் ஒரு குண்டு கூட விஜய் உடலில் படவில்லை. பாதி படம்தான் முடிந்திருக்கிறது!!!
----------------------------------------------
Thursday, January 14, 2010
பாபூஸ், கைபூஸ், ஹைட்டி,வெற்றிவேல்.. இன்னபிற
Subscribe to:
Post Comments (Atom)


8 comments:
தல பக்கா..எங்க ஊர்ல மாட்டுபொங்கல் அன்னிக்கு சாயங்காலம் மாட்டு வண்டியில் வலம் வருவோம்..
அது ஒரு ஜாலி..;)
நன்றி வினோத்கௌதம்
மாட்டு வண்டி சவாரி ஜாலிதான்..
நல்ல ரசனையான எழுத்துக்கள்! தொடர்ந்து நிறைய எழுதவும் சாதிக்கவும் வாழ்த்துக்கள்!
அந்த வாசகங்கள் எல்லாம் ரசித்தேன் :)
வாழ்த்துக்கு நன்றி தங்கமணி பிரபு
நான் ரசித்ததை நீங்களும் ரசித்தது குறித்து மகிழ்ச்சி சின்ன அம்மணி
//“I HATE PEOPLE WHO READ T.SHIRTS”, என்று எழுதியிருந்தது. தேவைதான் எனக்கு.//
super pattiyan unmaiyai sonnathukku ..:-)
//கலைஞர் தொல்லைக்காட்சியில் குருவி பறக்கிறது. விஜயின் உடலுக்கு நேராய் நீட்டி நூறு முறையாவது சுட்டு விட்டார்கள். ஆனால் ஒரு குண்டு கூட விஜய் உடலில் படவில்லை. பாதி படம்தான் முடிந்திருக்கிறது!!!//
பொங்கல் ஸ்பெஷல் என்ன சொல்ல பாபூஸ் கைபூஸ் தான் ஹாஹாஹா
நன்றி தேனம்மை
உண்மையைத் தவிர வேறொன்றும் சொல்வதில்லை.. பொய் மட்டும் விதிவிலக்கு :)
Post a Comment