Tuesday, January 19, 2010

புனிதன் !!!

“என்ன ப்ளான்?”

“அதான் சொல்லிட்டேன்ல”

“முடியுமா நம்மால?”

“ட்ரை பண்ணலாம்..”

“எங்க மீட் பண்றோம்? எப்போ?”

“ஹைலண்ட் ஹாஸ்டல் பின்னால, பாரஸ்ட்ல.. சாயங்காலம் அஞ்சு மணி”

“தேவையான எல்லாம் ரெடியா?”

“ஆங்.. ரெண்டு கோல்டு கிங்ஸ் பாக்கெட், நாலு வில்ஸ் பில்டர் பாக்கெட், மேட்ச்பாக்ஸ்”

“லைட்டர் இல்லையா?, அங்க காத்து ஜாஸ்தி”

“பாத்துக்கலாம்”

“ஆமா, ஹீரோ பேரு என்ன?”

“புனிதன்”



“ஆ.. ஊ.. ஏய்.. எங்கேடா இருக்கே..”

“பாவிகளா.. ஏண்டா இவ்ளோ சத்தம்..”

“நீ எங்க ஒளிஞ்சிருக்கன்னு கண்டு பிடிக்கத்தான்.. ஏன், என்னாச்சு?”

“புதருக்கு பின்னால அழகான மொசக்குட்டி.. ரசிச்சிகிட்டு இருந்தேன். ஒடிடுச்சி..”

“அடப்பாவி, மொசக்குட்டிய ரசிச்சியா, அப்படியே லவட்டிருந்தீன்னா.. இன்னைக்கு சைட் டிஷ்”

“மொச புடிக்கற திறமை எல்லாம் என்கிட்ட கிடையாது”

“புடிக்க வேணாம், கல்லால குறி பாத்து ஒரு அடி..”

“டேய்.. அதோட காட்டில நாம வந்து குந்திகிட்டு அதையே கல்லால அடிக்கணுமா..?”

“சரி வுடு.. வேலைய ஆரம்பிக்கலாம்”

“தம்மு குடு”

“அய்யோ, அதை ஏண்டா அப்படியே போடற.. காஞ்ச சருகு.. பத்திருச்சினா..”

“பத்தட்டும்.. பாரஸ்ட் பயர்..”

“விடுறா, புனிதனை பத்தி சொல்லு”

“புனிதன் யாரு?”

“புனிதன்தாண்டா ஹீரோ”

“ஓஹோ.. சொல்லு அவன பத்தி”

“புனிதன் ஒரு கம்யூனிஸ்ட்”

“அப்டீன்னா..?”

“அவன் ஒரு கம்யூனிஸ சிந்தனை உள்ளவன்”

“கம்யூனிஸம்னா?”

“அப்டின்னா..... வந்து....”

“நான் வேணும்னா ட்ரை பண்ணட்டுமா?.... ம்.. ஆத்தா வச்ச கஞ்சிய அவளோட அஞ்சு புள்ளைகளுக்கும் சமமா பங்கு போட்டு குடுக்கறா”

“டேய் லூசு, எல்லா ஆத்தாக்களும் அப்படித்தானேடா பண்ணுவாங்க”

“இல்லையே.. என் ஆத்தா கஞ்சி பானையை கூடத்தில வச்சுட்டு போயிட்டா, முதல்ல வர்ற நான் ஒரு மொக்கி மொக்கிடுவேன்.. கடைசியா களைச்சி வர்ற என் அண்ணணுக்கு வெறும் பானைதான் மிஞ்சும்...”

“கரெக்டா இருக்குமா..”

“அப்டீத்தான் நெனக்கிறேன்..”

“சரி, இதை எப்படி நாம கொண்டு வரப் போறோம்”

“ம்.. புனிதன் எப்பவும் சிவப்பு சட்டை போடுவான், அவன் வர்ற சீன் எல்லாம் சிவப்பு பேக்ரவுண்ட்ல இருக்கும்..”

“எப்பவும் ஒரு வார தாடி வச்சிருப்பானா?”

“ஒரு மாசமா இருந்தா நல்லாருக்கும்”

“ஜீனியஸ்டா நீ”

“வெறும் ஜீனியஸ் இல்ல.. இண்டிஜீனியஸ்..”

“கையில எப்பவும் ஏதாவது புத்தகம் வச்சிருப்பான்..”

“ஏழ்மை, வறுமை, பசி, பட்டினி, புரட்சி, போராட்டம், முதலாளி, தொழிலாளின்னு எப்போதும் பேசிட்டே இருப்பான்”

“அப்புறம்”

“அரசாங்கத்தை விமர்சிச்சிட்டே இருப்பான்.. அது ராமனா இருந்தலும் ராவணனா இருந்தாலும்.. விமர்சனம்தான்..”

“அதுக்கு அவனே ஆட்சி அமைக்கலாமே...”

“வெயிட், வெயிட்.. நாம கொஞ்சம் டூ மச்சா போறோம்னு தோணுது”

“ஆமா, அரசாங்கம்லாம் நமக்கு எதுக்கு”

“ஆமா.. புரட்சி, போராட்டம், முதலாளி, தொழிலாளின்னு எப்போதும் பேசிட்டே இருப்பான்கிறதோட நிறுத்திக்கலாம்”

“அப்படி போற அவன் வாழ்க்கையில ஒரு தடுமாற்றம்..”

“என்ன?”

“அது நாளைக்கு... சவுக்குத் தோப்புல இதே நேரம்..”



க்க்கீக்கி.... கிக்கீக்க்கி...”

இந்த குயில் சத்தம்தான் என்ன இனிமையா இருக்கு.”

அது குயிலா ஒனக்கு

க்க்கீக்கி.... கிக்கீக்க்கி...”

பின்ன மயிலா மரத்து மேல குந்திருக்கு?”

“மைனா”

“இன்னா நைனா?.. அவிங்கள காணாம். தம்மு வாங்க இவ்வளோ நேரமா?”

“வருவாய்ங்க..”

“சரி வரட்டும்”

“இன்னிக்கி என்ன?”

“சொல்றேன்”

"வானுயர்ந்த சோலையிலே, நான் நடந்த பாதையெல்லாம்..."

“வாங்கடா.. என்ன பொருள் இருக்கா?”

“இல்லடா.. செட்டியார் அக்கவுண்ட் ஓவரா போய்டுச்சுன்னு தர மாட்டேன்னுட்டான்

“செட்டியாரப் போட்டு xxxxxxxxxxxx”

“சரி விக்கி கடை ட்ரை பண்ணலையா”

“ம்.. அவுங்க அப்பா கடையில இருக்காரு”

“ஆஹா...”

“அப்ப என்னதான் வழி?”

“குடுசா”

“குடுத்தாரா?”

“ம்..ஆனா, பில்ட்ர் இல்ல... சிசர்”

“ஏதோ ஒண்ணு மண்டையா.. திங்கவா போறோம்.. இழுக்கத்தானே”

“யெஸ்..யெஸ், வெரி மச்”

“பீட்டரு??”

“எனக்கு ஒரு பாதாம் பருப்பு ஒடைச்சு குடுடா?”

“போடா, எனக்கே இது பத்தாது”

“சரி.. என்ன தடுமாற்றம்”

“யாருக்கு?”

“புனிதனுக்கு”

“ஓ..அது.. ஆங்.. ஒருநாள் காலை ஏழு மணி, புனிதன் வழக்கம் போல கையில் புத்தகத்தோட நடந்து வரான்.. காலை வாக்கிங்”

“இனிமையான காலைப் பொழுதா?”

“கோலம் போடுற பொண்ணுங்க உண்டா?”

“ம்.. நல்ல ஐடியா, கட்டாயம் உண்டு"

“செகப்பு சட்டை, ஒரு வார.. சேச்சே.. ஒரு மாச தாடி உண்டா?”

“காலைப் பொழுதை ரசிச்சபடியே வரான்.. வர்ற வழியிலே பஸ் ஸ்டாப்பு”

“ஓ.. புரிஞ்சிருச்சி..”

“தோளில புத்தகப் பையோட நிக்கறா நம்ம கதாநாயகி”

“செக்கச் செவால்னு.. சுண்டுனா ரத்தம் வர்ற..”

“நீ அதிலயே நில்லு.... மினு மினுன்னு ஷைனிங்கான மாநிறந்தான், வெளிர் நீல பாவாடை. குட்டை பாவாடையா அரைப் பாவாடையான்னு தெரியாத பாவாடை. வெள்ளை நிற ஷர்ட்டு.. அலையடிக்கிற கூந்தல்”

“பேரு?”

“இருட்டிருச்சு.., போலாமா?”

“டேய் பேர் சொல்லிட்டு போடா..”

“இருட்டினா சவுக்கு தோப்புக்கு பாம்பு வருமாம்”

“ஆமா நல்ல்ல்ல்ல.. பாம்பு”

“என்னா பயமுறுத்தலா.. மிரட்டலுக்கு பணியமாட்டான் இந்த..”

“சரி.. எல்லாரும் அவளுக்கு நல்ல பேரா யோசிச்சிட்டு நாளைக்கு சாயங்காலம் தொம்மன் கோவிலுக்கு வந்துருங்க”

“ஓக்கேடா பாப்போம்...”



“என்னடா.. அய்யனார் கத்தியையே மொறச்சி பாக்கற?”

“ம்.. SRT கிட்ட அடி வாங்கினத நெனச்சி பாக்கறான் போல..”

“போடா, அடிபட்டவனுக்குதான் வலி தெரியும்..”

“கிளாஸ்ல ஏண்டா தூங்கின?”

“தூங்கல”

“பின்ன?”

“பேர் யோசிச்சிட்டிருந்தேன்”

“ஹா..ஹ..ஹாஹா..ஹாஹா...”

“நீ சொல்லு”

“பார்வதி”

“கர்மம்.. போயும் போயும் உன் ஆளு பேர்தானா.. இதத்தான் மேத்ஸ் கிளாஸ்ல யோசிச்சியா?”

“மாநிறமா, லைட் புளூ ஸ்கர்ட், வைட் ஷர்ட் போட்டு ஏழு மணிக்கு பஸ்க்கு நிக்கறவ இந்த ஊர்ல அவ ஒருத்திதான்”

“இல்ல அது சரிவராது”

“உமா”

“என்ன உன் ஆளு பேர்ல பாதியா?”

“விஜி”

“அவதான் நீ வாங்கி கொடுத்த சாக்லெட்டை அவ நாய்க்கு ஊட்டினாளே”

“அதும் பைவ் ஸ்டார்.. டேய் உன் தங்கச்சிக்கி எப்பயாவது பைவ் ஸ்டார் வாங்கி குடுத்திருக்கியாடா?”

“நாலு கோல்டு கிங்ஸ் காசு.. நாய் தின்னுடுச்சு..”

“இருங்கடா.. பேர் சொல்ல சொன்னா சண்டை போட்டுட்டு..”

“ஏய், பார்வதின்னே வச்சிரலாம்.. அவன் ஆசைய ஏண்டா கெடுக்கற”

“இல்ல..”

“ஏன்?”

“அவனுக்கு அந்த பேர் புடிக்காது.. ஏன்னு எனக்கு தெரியும்..ஹி.ஹி”

“ஏய் என்னடா.. ஏண்டா புடிக்காது ஒனக்கு? அவன் ஏண்டா ஒரு மாதிரி சிரிக்கறான்?”

“அவனுக்கு லூசுடா.. அதெல்லாம் ஒண்ணும் இல்ல.. சரி இப்படி பண்ணலாம், நாயகிக்கு இப்போதைக்கு பேரே வேணாம்.. கதை முடியும்போது பாத்துக்கலாம்”

“ஆனா பேரு சும்மா அசத்தலா இருக்கணும்..”

“சரி போலாம்.. கிளம்பட்டும் நமது படை”

“நேரா போஸ் கடைக்கு”

“ஏதுடா உனக்கு நூறு ரூபா?”

“சீக்ரெட்”



“இன்னும் கொஞ்சம் சோடா ஊத்துடா”

“ஏண்டா பயப்படற, என்ன ராவாவா அடிக்க சொல்றோம்?”

“இல்லடா.. சோடா கம்மியானா, நைட்டெல்லாம் ஒரே தண்ணி தாகம், காலையில தலைவலி”

“டேய், எல்லா ஆம்லேட்டையும் நீயே மொக்காதடா”

“தம்பி.. நாங்களும் இருக்கோண்டா”

“சரி.. சொல்லு, ஏண்டா ஒனக்கு அந்த பேர் புடிக்கல?”

“எந்த பேர்?”

“சிவாஜி. கணேசா, சும்மா நடிக்காத”

“அவன் ஆளு பேரு...ஹி.ஹி”

“பாருடா மறுபடியும் அதே நக்கல் சிரிப்பு”

“டேய். நாயே.. உனக்கு இனிமே சரக்கு கிடையாதுடா, அவ்வளோதான்”

“ஏண்டா சும்மா வம்பு இழுத்து வக்கிற?”

“டேய் மண்டையா, அத பத்தி ரெண்டு பேரும் பேசினீங்க, ஸ்பான்சர் கட் பண்ணிருவேன் சொல்லிப்புட்டேன்”

“சரிடா.. சரிடா.. கொஞ்சம் ஜாஸ்தியா ஊத்து எனக்கு”

“அப்புறம் ஒரே லவ்வா?”

“யாருக்கு?”

“புனிதனுக்கும், நம்ம பெயரில்லாத நாயகிக்கும்”

“இல்ல.. புனிதன் மட்டும்தான் அவள பாக்கறான். அவ அவன பாக்கல”

“ம்..”

“புனிதன் அவ நெனப்பாவெ இருக்கான். அவள பத்தி தகவல் சேகரிக்கறான்”

“எங்கருந்து”

“அவனுக்கு தெரிஞ்ச எல்லா பொண்ணுங்ககிட்டருந்தும்.. இன்குலூடிங் அவனோட தங்கச்சி அண்ட் அவளோட பிரண்ட்ஸ்”

“என்ன தகவல்.. அதான் பெயர் இல்லையே.. வேறென்ன தெரிய வருது?”

“சொல்றேன்.. கொஞ்சம் மிச்சர் குடு”

“ஆய்டுச்சுடா”

“அப்போ வாங்கிட்டு வா..”

“இல்ல போவோம்.. எங்கப்பா வீட்டுக்கு வரதுக்கு முன்னாடி, நான் சத்தமில்லாம போய் செட்டில் ஆகணும்”

“போடா பயந்தாங்கொள்ளி”

“ஆமா இவரு சண்டியரு.. அவங்கப்பா முன்னாடி போயி நின்னு உஸ்சுன்னு ஊதி காமிப்பாரு.."

"சரி நாளைக்கு எங்க?”

“நீயே சொல்லு”

“கோட்டாத்தூர் ரோடு ஏரி ஒக்கேவா..?”



பதினஞ்சு ஆண்டுக்கு பிறகு...
---------------------------------------------

பொட்டுக் கடலை நூறு வேற என்னம்மா வேணும்?

அரிசி சூப்பர் சார்.. எங்க மொதலாளி வீட்டிலயே இதுதான் சமைக்கிறாங்க.. சாப்பாடு நல்லா இருக்கும்..

நல்லெண்ணை தீந்திடுச்சும்மா.. சாயங்காலம் தரட்டுமா

மார்க்கெட்ல இன்னைக்கு என்னண்ணே எடுக்கணும்?

பாப்பாகிட்ட அம்பத்து மூணு ரூவா வாங்கிக்கங்க அண்ணே.
---------------------------------------------

வாட்டர், நார்மல் வாட்டரா? மினரல் வாட்டரா சார்?

மஞ்சூரியன் கொஞ்சம் டிரையா இருக்கும்.. சிக்கன் மசாலா கிரேவியா போடச் சொல்லட்டுமா?

டெஸர்ட் ஐஸ்கிரீம்.. புரூட் சாலட், கேரமல்.. இருக்கு சார்

ஆர்டர் ரிப்பீட் பண்ணட்டுமா?

பிங்கர் பவுல் கொண்டு வரேன் மேடம்.
---------------------------------------------

யோவ் மெக்கானிக்.. எப்பய்யா வருவ?.. பயிரெல்லாம் வாடுதுய்யா.. சீக்கிரம் வாய்யா..

பின்ன நான் என்ன மாடு பூட்டி, சால் கட்டியா இறைக்க முடியும்..

எப்படித்தான் இந்த தடவை குத்தகை குடுக்க போறேனோ

அதெல்லாம் அறுவடைக்கு அப்பறம் பாத்துக்கலாம்..

டேய், அங்க கரை கட்டிட்டு இந்த பக்கம் தண்ணிய வுடுடா..
---------------------------------------------

மேனேஜர் மொறைச்சான்.. போடான்னு தூக்கி வீசிட்டு வந்துட்டேன்

அடுத்த வாரம் சென்னையில் ஒரு இண்டர்வியூ இருக்கு.. பாப்போம்

எங்கடா..... பொண்ணுங்கள பாத்து வழியறாய்ங்க.. நாம பேசும்போது வேற எங்கயாவது பராக்கு பாத்துட்டு அனுப்பிடறாய்ங்க

ரொம்ப அலைச்சல் வேலைங்க அது.. நமக்கெல்லாம் அது சரிப்படாது

அந்த கம்பெனி ரொம்ப மோசமா போய்ட்டிருக்குன்னு கேள்விப்பட்டேன்





முன்ன ஒரு காலத்தில (2008 ஜூன், ஜூலையில்) இதை ஒரு தொடரா எழுதிட்டு வந்தேன். அப்புறம் ரெஸ்பான்ஸ் சரியா இல்லாததால் அப்படியே முடிச்சிட்டேன். இப்போ சில பல காரணங்களுக்காக அதை கொஞ்சம் எடிட் செய்து ஒரே இடுகையாக்க முயற்சி..

15 comments:

thenammailakshmanan said...

சூப்பரா இருக்கு பட்டியன்

நல்ல கட்டுக்கோப்பா இருக்கு

கதை திரைக்கதை வசனம் ரெடி

ஒரு தயாரிப்பாளரையும் டைரக்டரையும் பிடிங்க

நல்ல சினிமா நிச்சயம்

PPattian : புபட்டியன் said...

வணக்கம் தேனம்மை.. நீங்க சீரியஸா சொல்றீங்களா இல்லை என்ன வச்சி காமெடி, கீமெடி பண்றீங்களான்னு தெரியலை :)

பாராட்டுகளுக்கு மிக்க நன்றி.

சின்ன அம்மிணி said...

//செக்கச் செவால்னு.. சுண்டுனா ரத்தம் வர்ற..”//

அப்பத்தானே வடக்குல இருந்தா யாரையாவது தேடமுடியும் :)

இடுகை கொஞ்சம் பெரிசா போயிடுச்சுன்னு தோணுது.

வினோத்கெளதம் said...

பெருசா இருந்தாலும் 'ஏக்' தம்ல படிச்சிட்டேன்..
நீங்க ஏன் வசனகார்தவாக முயற்சி செய்யகூடாது...;)
நல்லா இருக்கு தல..

PPattian : புபட்டியன் said...

நன்றி சின்ன அம்மிணி

நீளம்... எட்டு இடுகையா இருந்ததை ஒரே இடுகையாக்கியதின் விளைவு :)

//அப்பத்தானே வடக்குல இருந்தா யாரையாவது தேடமுடியும் :)//

ஆனாலும், அடுத்த வரியே இப்படி சொல்லுதே..

// மினு மினுன்னு ஷைனிங்கான மாநிறந்தான்//

PPattian : புபட்டியன் said...

ஏக்தம்மில படிச்சதுக்கு நன்றி வினோத்கௌதம்

//நீங்க ஏன் வசனகார்தவாக முயற்சி செய்யகூடாது...;)//

ஒரு காலத்தைய கனவு.. :)

கமலேஷ் said...

அடடா பல காட்சிகள் அப்படியே கண்முன் விரிகிறது...திரைகதை ஆசிரியரா நீங்க... சொல்லவே இல்ல...??? மீண்டும் அந்த தொடரை நீங்கள் தொடரலாமே...

PPattian : புபட்டியன் said...

நன்றி கமலேஷ் உங்கள் பாராட்டுகளுக்கு.

திரைக்கதை எல்லாம் தெரியாது :)

நேரமிருக்கும்போது தொடர முயற்சிக்கிறேன்.

அக்பர் said...

நல்லாயிருக்கு பாஸ்.

படிச்சு முடிச்சதே தெரியலை. அவ்வளவு வேகம்.

PPattian : புபட்டியன் said...

வருகைக்கும் ஊக்குவிப்புக்கும் நன்றி அக்பர்

My days(Gops) said...

brother epadi ipadi elaam? orey swing'la imaaamb perusa eludhi irukeeenga? kalakal ..

தியாவின் பேனா said...

super story நல்லாயிருக்கு நேர்த்தியான கதை

PPattian : புபட்டியன் said...

வருகைக்கு நன்றி My days(Gops)

இது முன்னமே 8 இடுகைகளாக எழுதினது.. எல்லாத்தையும் கோர்த்து ஒரே மாலை ஆக்கிட்டேன்.

பாராட்டுக்கு நன்றி தியாவின் பேனா

தியாவின் பேனா said...

சூப்பர்.

ஏவிஎஸ் said...

ரொம்ப ரசித்தேன்.

வெறும் டயலாக் மூலமாகவே, அதுவும் கேரக்டர்களுக்குப் பெயரோ, சித்திரமோ கொடுக்காமலே எழுதப்பட்ட டயலாக், ஒரு கதை படித்தது இதுவே முதல் தடவை.

சிகரெட் பிடிச்சுட்டு, தண்ணியடிச்சுட்டு, ஊர் சுத்திட்டு, வெறுங்கதை பேசிட்டு இருக்கிறவங்க எதிர்காலம் மளிகைக் கடை சிப்பந்தி, உணவு விடுதி பரிசாரகர் என்ற ரேஞ்சில்தான் முடியும் என்ற நீதிபோதனைக் கதை மாதிரி முடிந்து விட்டதே என்ற சின்ன வருத்தம் உண்டு. இல்லை என் சிறு சிந்தனையை மீறிய ஆழமான விஷயங்கள் ஏதாவது கதை முடிவில் உள்ளதா?