Thursday, February 11, 2010

அடித்துக் கொள்வர்

அடித்துக் கொள்வர்
மொழியின் பேரால்
சிங்களர் என்றும் தமிழர் என்றும்

ஓர் மொழியானவரும்
பார்ப்பனரென்றும் பிறரென்றும்
ஆதிக்கசாதியும் தாழ்த்தப்பட்டும்

மொழி தாண்டி சாதி தாண்டி
மதம் பிடித்து
இந்துவென்றும் முஸ்லீமென்றும்

ஒரே மதத்தின் நாடு
ஆனாலும் விலக்கல்ல
சுன்னியென்றும் ஷியாவென்றும்

மதமெல்லாம் பின் தள்ளி
அப்படியே அப்படியே
முதலாளியும் தொழிலாளியும்

கட்சிக்கும் கொடிக்கும்
நாற்காலிக்கும் அதிகாரத்துக்கும்
வெற்றிக்கும் வோட்டுக்கும்

கருப்பரென்றும் வெள்ளையெரென்றும்
வளர்ந்த நாடும் மூன்றாமுலகமும்
இன்னமும் இன்னமும்

மண்ணாசை பெண்ணாசை
பொன்னாசை போய்ச் சேர்ந்து
எண்ணெய்க்கும் சண்டை

காரணமே இல்லாவிடினும்
காரணத்தை தோண்டித்தேடி
காழ்ப்புணர்வை உருவாக்கி

அணு ரசாயண
ஆட்கொல்லி ஆயுதங்கள்
புதிது புதிதாக

என்றைக்கும் என்றைக்கும்
அடித்துக் கொல்லவே
அவதரித்த மனிதகுலம்

17 comments:

thenammailakshmanan said...

//மண்ணாசை பெண்ணாசை
பொன்னாசை போய்ச் சேர்ந்து
எண்ணெய்க்கும் சண்டை//

உண்மை பட்டியன் அருமையா எழுதீருக்கீங்க

PPattian : புபட்டியன் said...

ரொம்ப நன்றி தேனம்மை

ஏதோ தோணினதை எழுதி வைத்தேன்

கமலேஷ் said...

உண்மையான வரிகள் தோழரே...நன்றாக வெளிப்படுத்தி இருகிறீர்கள்...தொடருங்கள்....

சின்ன அம்மிணி said...

//அடித்துக் கொல்லவே
அவதரித்த மனிதகுலம்//

உண்மை

PPattian : புபட்டியன் said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கமலேஷ்

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சின்ன அம்மணி

"உழவன்" "Uzhavan" said...

ஏதாவது ஒன்றிற்காக எப்போதும் அடித்துக் கொண்டுதான் இருக்கிறது மனிதவிலங்கு.

PPattian : புபட்டியன் said...

வாங்க உழவன், நன்றி

நான் கவிதையில சொன்னதை, நீங்க ஒரே வரியில அட்டகாசமா சொல்லீட்டிங்க..

//ஏதாவது ஒன்றிற்காக எப்போதும் அடித்துக் கொண்டுதான் இருக்கிறது மனிதவிலங்கு//

உண்ண்ண்ண்மை....!

Muniappan Pakkangal said...

Nice kavithai Pattiyan.

த.ஜீவராஜ் said...

நிஜத்தைச் சொல்லும் வரிகள் , நன்றாக இருக்கிறது.

PPattian : புபட்டியன் said...

நன்றி முனியப்பன் பக்கங்கள் MP??? :)

நன்றி த.ஜீவராஜ்

தியாவின் பேனா said...

அருமை

PPattian : புபட்டியன் said...

நன்றி தியாவின் பேனா

Anonymous said...

உண்மையான வரிகள் தோழரே...நன்றாக வெளிப்படுத்தி இருகிறீர்கள்...தொடருங்கள்........

priya said...

உண்மையான வரிகள் தோழரே...நன்றாக வெளிப்படுத்தி இருகிறீர்கள்...தொடருங்கள்...

priya said...

உண்மையான வரிகள் தோழரே...நன்றாக வெளிப்படுத்தி இருகிறீர்கள்...தொடருங்கள்....

priya said...

உண்மையான வரிகள் தோழரே...நன்றாக வெளிப்படுத்தி இருகிறீர்கள்...தொடருங்கள்....

priya said...

உண்மையான வரிகள் தோழரே...நன்றாக வெளிப்படுத்தி இருகிறீர்கள்...தொடருங்கள்....