நேற்றைய "நீயா? நானா?" அற்புதமாக இருந்தது. பொங்கலின்போது நடந்த பேச்சாளர்கள் பங்கேற்றிய நிகழ்ச்சி போலவே சுவாரசியமாக.. அதே நேரம் பயனுள்ளதாக. உரையாடல் சுயமுன்னேற்ற புத்தகங்கள் குறித்து.
பங்கேற்பாளராக சுய முன்னேற்ற நூல்கள் எழுதிய சோம. வள்ளியப்பன், எதிர் அணியில் முத்துகிருஷ்ணன் (இவரது பின்புலம் என்னவென்று தெரியவில்லை) கலந்தது மட்டுமில்லாமல், சிறப்பு விருந்தினர்களாக சுபவீயும் ரமேஷ் பிரபாவும். எல்லாரும் சுவையும் பொருளும் கலந்து மகிழ்வித்தார்கள். கோபிநாத் சொன்னது போலவே அது கட்டாயமாக ஒரு Intellectual Discussion.
வழக்கமாக நீயா நானாவில் நான் வைக்கும் குறைபாடு சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்படுபவர்களை ஊறுகாய் போல கொஞ்சமாய் பேச விடுவது. நேற்று அது முற்றிலுமாக பொய்யாக்கப்பட்டது.
ரமேஷ் பிரபாவின் "சந்தித்த வேளை" ஒரு அருமையான நிகழ்ச்சி.. பேட்டி எடுப்பதில் வித்தகர் அவர். அது குறித்து ஒரு தனி இடுகையே எழுதலாம். சுவையாகப் பேசினார். சுபவீ அவர்கள், தனிமனித சுயமுன்னேற்றத்தை புறக்கணித்து சமூக முன்னேற்றமே அவசியம் எனக் கூறியபோது, அதற்கு எதிர்வினையாக சோம. வள்ளியப்பன் என்ன கூறப் போகிறார் என்று யோசிக்குமுன்னேயே அழகாக “ஆத்திகம், நாத்திகம்”, “சோஷலிஷம், கேப்பிட்டலிசம்” போலவே “தனி மனித முன்னேற்றம் மூலம் சமூக முன்னேற்றமா அல்லது சமூக முன்னேற்றம் மூலம் தனி மனிதனா” என்று கூறியபோது.. வாவ்.. வாவ்
நான் இதுவரை சுயமுன்னேற்ற நூல்கள் பெரிதாகப் படித்ததில்லை. "Who Moved my Cheese" மட்டும் படித்தேன்... ஒரு அழகிய கதை போல அவ்வளவே. அது எனக்கு வாழ்வில் உதவியதா என்றால்.. நஹின்..
-------------------------------------------
நண்பர் பழமைபேசி அவர்களின் இந்த இடுகையில் கவிஞர் சல்மா அவர்களின் ஒரு கவிதையை வழங்கியிருந்தார். அழகான வரிகளோடு நல்ல ஒரு கவிதை. ஆனாலும் அதை படித்தபின் ஒரு நெருடல்... ஏன் ஆண்கள் என்றாலே இப்படி பார்க்க வேண்டும் என்று.. கவிதை நன்றாக இருந்தாலும் அதன் கருவுடன் உடன்பாடில்லை.. எனவே ஒரு எதிர்வினையாற்றினேன். அதை கொஞ்சம் மாற்றி இதோ..
நம் குழந்தையை நான் சுமக்க முடியாது
இயற்கை எனக்களித்த குறைபாடு
நீ சுமந்த தடயங்கள் என் சொர்க்கம்
இரண்டாம் ஜாமம் முதலினும் சுவை
-------------------------------------------
கொஞ்ச நாட்களாகவே தொல்லைக்காட்சியில் ஒரு அடுக்குமாடி குடியிருப்புக்கான விளம்பரம் வந்து கொண்டிருக்கிறது. நாட்பதிலிருந்து ஐம்பதைத் தொடும் சில நண்பர்கள் Over the Dinner Table பேசுவதாகக் காட்டப்படும். அதன் மாடல்கள் (நடிகர்கள்) எல்லாம் எதார்த்தமாக நாம் அன்றாடம் பார்க்கும் மாந்தர்கள் போலவே பேசியும், முகபாவங்கள் காட்டியும் விளம்பரத்தை அழகானதாக ஆக்கியுள்ளனர். அதில் ஒருவர் கூறும் வசனம், " கோயம்பேடு.. அப்பவே வாங்கியிருந்தா இப்ப நான் கோடீஸ்வரன் சார்".. அதேபோல விளம்பரம் முடியும் தருவாயில், "இப்போ வாங்கினா அப்பறம் கோடீஸ்வரந்தான்" என்று ஒருவர் கூறுவார்.
இது எங்கேயோ கேட்ட மாதிரி இருக்குதே.. JBJ குறித்த இந்த பதிவை எழுதி சில நாட்கள் கழித்தே இந்த விளம்பரத்தை முதல் முதலாய் நான் பார்த்தேன். அந்த விளம்பர இயக்குநர் என் பதிவைப் பார்த்திருப்பாரா என்றெல்லாம் கேட்கப் போவதில்லை.. "Great men think alike" ஆகவும் இருக்கலாம் இல்லையா ஹி..ஹி..
-------------------------------------------
கடைசியாக ஒரு வழியாக அவதார் பார்த்து விட்டேன், அதுவும் முப்பரிணாமத்தில். 3டி கண்ணாடிக்கு 20 ரூபா வாங்கினார்கள். கண்ணாடியை நாமே வைத்துக் கொள்ளலாம் என்று நினைத்தால், போகும்போது திரும்பி கொடுத்து விடச் சொல்லியும், ஏதேனும் டேமேஜ் இருந்தால் 150 ரூபா அறவிடப்படும் என்றும் ஒரு சிலைடு காட்டப்பட்டது. அப்படீன்னா அந்த கண்ணாடி வெறும் 150 ருபாதான். ஆனா, ஒரு காட்சிக்கு அதற்கு வாடகை 20 ரூபா.. கண்ணாடியிலேயே கொள்ளை லாபம்.. அடப்பாவிகளா.
படம் குறித்து நான் ஏதானும் எழுதணுமா என்ன. இப்படி ஒரு படம் இனி யாராலாவது எடுக்க முடியுமா என்று நினைக்க வைத்தது. இதே நினைப்புதான் பல வருஷங்களுக்கு முன் ஜூராஸிக் பார்க் பார்க்கும்போதும் வந்தது. உலகம் எங்கேயோ போகிறது. பக்கத்து சீட்காரரின் செல்பேசி, பின்னால் இருந்து பேசிக்கொண்டே இருந்த சிறுவர்கள் தவிர்த்து பார்த்தால், நான் ஒரு இரண்டு மணிநேரம் பரவச நிலையில் இருந்திருக்கிறேன். (ஹக்காங்.. நாமளும்தான் அடைவோம்.. பரவசம் !)
பண்டோராவின் காடுகள் கொள்ளை அழகு. டிஸ்கோ டான்ஸர் போல பாதம் பட்டால் பல்பு பத்தும் புற்கள், சுற்றி, சுற்றி கத்திப்பரா மேம்பாலம் போல கிளைகள் கொண்ட மரங்கள்.. கல்யாண வீட்டு சீரியல் பல்புகள் போல விழுதுகள், வினோத மிருகங்கள், வண்ணத்துப்பூச்சி இறக்கையின் அழகு கொண்ட ராட்சதப் பறவைகள், ஜெல்லி மீன் போல மிதக்கும் பூச்சிகள் என்று எல்லாம் இருக்கும். நீர்வாழ் உயிரினங்கள் இல்லாதது ஒன்றே குறை. அந்த ராட்சத ஜாகுவார் போன்ற மிருகத்திடம் இருந்து தப்பி நீர்வீழ்ச்சியில் கீழே விழுந்தவுடன் ஒரு வினோத ராட்சத முதலை வந்திருந்தால் எப்படி இருக்கும்..(Avatar 2 வில் அதுவும் இருக்குமோ)
அவதார் கிராபிக்ஸ் எல்லாம் உலகின் 196 வது தரவரிசையுடைய சூப்பர் கணிணி மூலம் தயாரிக்கப்பட்டதாம், ஒரு நிமிடத்தின் கிராபிக்ஸ் கிட்டத்தட்ட 20 GB கொள்ளுமாம். இதற்கென்றே ஒரு 3D கேமராவை கேமரான் உருவாக்கினாராம். இப்படி.. இப்படி போகிறது அதன் பின் உள்ள உழைப்பு.
அவதார் குறித்து என்னை எழுதச் சொன்ன வாசகி திருப்தியடைவார் என்ற நம்பிக்கையுடன்..
Monday, March 1, 2010
நீயா? நானா?, கவிஞர் சல்மா, அவதார்.. இன்னபிற
Subscribe to:
Post Comments (Atom)


13 comments:
அவதார் 3Dல பார்த்தது உண்மையில் நல்ல அனுபவம்..ஏதோ வேற்று உலகத்திற்கு சென்று வந்ததைபோல்..
கவிதை சூப்பர்..;)
சுய முன்னேற்ற நூலை படிச்சீங்க அதில் சொன்ன படி முயற்சித்தீர்களா
சரி விடுங்கள் பல சுய முன்னேற்ற நூல்களில் சொல்வது நமக்கே தெரிந்ததுதான்
மந்திரசாவி என்று நினைக்கிறேன் அப்புத்தகத்தில் அதைப் படித்து மில்லியனர் ஆனவர்களின் தொகையெல்லாம் இருக்கும். கப்சா அப்படித்தானே
ப்புட்டியன் எதற்கும் அந்த விளம்பர விடயமாக நீங்கள் சட்ட நடவடிக்கை எடுப்பது நல்லது. எப்படி உங்கள் அனுமதி இல்லாமல்
பதிவுகள் நன்றாக உள்ளன. தொடர்ந்து எழுதுங்கள். வாழ்த்துக்கள்.
நட்புடன்- ஜீவேந்திரன்
நீயா நானா நெட்ல கிடைக்குமான்னு பாக்கறேன்.
அவதார் உண்மையிலேயே அருமை
//கண்ணாடியிலேயே கொள்ளை லாபம்.. அடப்பாவிகளா.
//
ஆகா... எப்படிங்க இதெல்லாம்? இப்படித்தான் எதையும் யோசிக்காம விட்டுவிட்டு.... விலைவாசி எங்கயோ போயிடிச்சி!
வார வாரம் வெளியிடப்படும் படங்களின் படவரிசைகளைப் பார்வையிட
http://tamiltop10ssss.blogspot.com/
அவதாரைப் பற்றி அழகான பகிர்வு பட்டியன் மேலும் கோடீஸ்வரன் விளம்பரதில் தன் மாமனார் தந்த ப்ராப்பர்ட்டியை விட்டுட்டீங்களே முத்து கிருஷ்ணன் அருமையா பேசினார் என்று ஜீவா முகப் புத்தகத்தில் போட்டு இருக்கிறார் நான் பார்க்கவில்லை பட்டியன்
அந்த விளம்பரம் ரொம்ப யதார்த்தம்,வீடு வாங்க முடியலைனாலும் பரவாயில்லை கல்யாணம் பண்ணிகிட்ட போதும் நல்ல இன்வெஸ்ட்மென்னு சொல்றாங்களோ!
நன்றி வினோத்கௌதம்
//ஏதோ வேற்று உலகத்திற்கு சென்று வந்ததைபோல்..//
பண்டோரா :)
நன்றி தர்ஷன்
//நூல்களில் சொல்வது நமக்கே தெரிந்ததுதான்
மந்திரசாவி என்று நினைக்கிறேன் //
ஆம், மந்திரசாவிதான். சிலருக்கு தேவைப்படாது. சிலர் கள்ள சாவி கொடுத்து விடுவார்கள்..
//எதற்கும் அந்த விளம்பர விடயமாக நீங்கள் சட்ட நடவடிக்கை எடுப்பது நல்லது//
என்னை வச்சு காமெடி கீமெடி பண்ணலையே :)
நன்றி ஆராய்வு ஜீவேந்திரன்
நன்றி சின்ன அம்மிணி
நன்றி பழமைபேசி
//இப்படித்தான் எதையும் யோசிக்காம விட்டுவிட்டு.... விலைவாசி எங்கயோ போயிடிச்சி!
//
என்னங்க பண்றது.. ஏமாளியாவே இருக்கோம் :(
நன்றி எழிழன்..
நன்றி தேனம்மை
//மாமனார் தந்த ப்ராப்பர்ட்டியை விட்டுட்டீங்களே //
கரெக்ட்.. மாமனார் ப்ராப்பர்ட்டிதான் ஹைலைட்.. அதுவும் கலக்கலா சொல்வார் அந்த மனிதர்.. கிச்சன்லருந்து முறைப்பு வேறு வரும் :)
நன்றி கார்த்திகா வாசுதேவன்
//வீடு வாங்க முடியலைனாலும் பரவாயில்லை கல்யாணம் பண்ணிகிட்ட போதும் நல்ல இன்வெஸ்ட்மென்னு சொல்றாங்களோ//
உண்மைதானே :))
அருமை
நன்றி தியாவின் பேனா
நன்றாக எழுதி இருக்கிங்க!
நன்றி பிரியா
Post a Comment