படங்களை க்ளிக்கினால் பெரிதாகும்
இந்த தாஜ்மஹாலைப் பார்த்தால் ஆக்ரா போகவே தேவையில்லை என்ற புரசை டைம்ஸ் பில்ட் அப்பைப் பார்த்து குடும்பத்துடன் செல்லத் திட்டமிட்டேன். முழு சென்னையும் தீவுத்திடலில் குழுமி விட்டதா என ஆச்சர்யம். ஞாயிறு என்றால் கேட்கவும் வேண்டுமா? பொருட்காட்சிக்கெல்லாம் சென்று சில பல ஆண்டுகள் ஆகி விட்டதால் ஒரு குழந்தைத்தனம் தொற்றிக் கொண்டு ஒரே பிரமிப்புதான்.
நாங்கள் நுழைந்தது ஒரு கோடி என்றால், தாஜ் இருந்தது மறுகோடியில். நட நடவென்று நட. வழியெங்கும், "அப்பா பலூன்", "அப்பா பபுள் ஊதுறது", "அப்பா ரங்கராட்டினம் (நன்றி: டோரா தமிழில்)", "அப்பா ஐஸ்கிரீம்" எல்லாவற்றுக்கும் தாஜா செய்து நேரே தாஜ் சென்றோம்.
வாயிலிலேயே ஒரு முறை கட்டணம் கட்டி சீட்டு வாங்கியிருந்தும் மறுமுறையும் சீட்டாம், வாசலில் பெரியவர் 20, குழந்தை 10. சரி தாஜ்மஹாலில் பெரியவர் 30, சிறுவர் 20.. என்ன கொடுமை ஷாஜகான் இது. பெரியவர் 10, சிறுவர் 5 என்றாவது வைக்க வேண்டாமா? ஏழைகளின் தாஜ் அல்ல அது. மிடில் கிளாஸின் தாஜ் :(
தாஜ் கொஞ்சமாக ஆண்டி-கிளைமாக்ஸ்தான். புரசை டைம்ஸ், அண்ணா நகர் டைம்ஸ் எல்லாம் கொஞ்சம் ஹைப் பண்ணி விட்டன. ஆனாலும் அழகாகவே இருந்த்து. ஆலையில்லா ஊருக்கு ஏற்ற இலுப்பைபூதான். பிளாஸ்டர் ஆப் பாரிஸில் கட்டப்பட்டாலும் உறுதியாகவே இருந்தது. தொட வேண்டாம் என்ற எச்சரிக்கையை மீறி தொட்டுப் பார்க்கவே எல்லாரும் ஆவலாய் இருந்தனர்.
செல்போன் காமிராவிலிருந்து ஹைடெக் காமிரா வரை விதவிதமாக சுட்டுத் தள்ளிக் கொண்டிருந்தனர். குடும்பம் குடும்பமாக பச்சை கார்பெட்டில் (புல்வெளி எஃபெக்ட்) அமர்ந்து ஓய்வு கொண்டிருந்தனர். நிஜ தாஜ்மகால் கம்பீரமாகவும், அமைதியாகவும் இருக்கும். சென்னை தாஜ்ஜில் மக்கள் இரைச்சல் போறாது என்று கவ்வாலி ஸ்டைல் பாடல்கள் வேறு அலறுகின்றன. நிஜ தாஜ்மகாலின் மினியேச்சர் என்று முன்பே தெரியுமாதலால் அளவு குறித்த ஏமாற்றங்கள் இல்லை.
நிஜமும் இதுவும், இமாலயமும், மடுவும் (அது தெரிந்ததுதானே). ஆனாலும், சென்னைவாசிகளும், பக்கத்து மாவட்டங்களும் கட்டாயம் சென்று ஒருமுறை பார்க்கலாம்.
தாஜ்மகாலில் இருந்து திரும்பும் வழியில் ஏதாவது ஒரு கேளிக்கை எந்திரத்தில் பயணிக்க வேண்டும் என்ற ஆசை மிகுந்தாலும், ஒவ்வொன்றிலும் வரிசை நீ.............ளம். வேறு வழியின்றி கிடைத்த ஒரு ப்ரீபால் எந்திரத்தில் குழந்தையை ஏற்றி விட்டோம். தாஜை விட இனிமையாக அமைந்தது அது. குழந்தைகள் குதூகலத்தில் சிரிக்க, அதைப் பார்க்கும் பெற்றோர் கீழிருந்து சூழல் மறந்து சிரித்து மகிழ, குட்டிகள் மேலிருந்து டாட்டா காட்ட, பெறுசுகள் கீழிருந்து, வினோத தருணங்கள் அவை. மேலே சென்றதும், டக் டக் என படிப்படியான் அதிர்வுகளுடன் கீழே வரும்போது குழந்தைகளின் பல்லிளிப்பும் அலப்பறையும்.. அப்பாடி.. இதற்காகவே பொருட்காட்சி போகலாம்.
அய்யன் அருவியில் மணிக்கொரு முறை நீரின் தரம் பார்க்கப்படுவதாக எழுதியிருந்த இடத்தில், PH வெற்றிடமாக இருந்தது. கட்டணம் கொஞ்சம் அதிகம் போலும் (100 - 150).. வெகு சிலரே உள்ளே குளித்துக் கொண்டு இருந்தனர்.
பொருட்காட்சியை ஒரு சுற்று சுற்றும் ரயில் பயணம் நன்று. 10 ரூபாய்க்கு பைசாவசூல்தான். மதன்பாப் ஏதோ ஒரு மூலையில் ஏதோ ஒரு இசை நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக் கொண்டிருந்தார். தூசியையும், வெப்பத்தையும் பொருட்படுத்தாது மக்கள் கண்டமேனிக்கு உண்டு கொண்டிருந்தனர். நாங்களும் கொஞ்சம் பாப்கார்ன் கொறித்தோம்.
சின்ன வயதில் டெல்லி அப்பளம் கேட்கும்போதெல்லாம், அம்மாவோ, அண்ணனோ.. "ச்சே.. என்ன கருமாந்திர எண்ணையில பொறிக்கிறானோ", "அந்த பொடி வயத்தை கலக்கும்" என்றோ சொல்லி.. சின்ன சின்ன ஆசைகளில் ஒன்றாகவே இருந்தது. இனி இருக்காது. ரெண்டு கடி கடித்ததும் நான் சொன்னது, "Last Time! Never Again..”
சோக்கோ பார் தின்னாமல் பொருட்காட்சி நிறைவுபெறாது என்பதால் ஜமாய் ஐஸ்கிரீமின் ச்சோக்கோ வாங்கி சட்டையில் ஒழுகத் தின்றோம். கிளம்பும்போது குழந்தைக்கு வாங்கிக் கொடுத்த பொருளினால் அன்று இரவு வீடு முழுதும் வானவில் தோய்த்த முட்டைகள் பறந்தன.


9 comments:
//அந்த பொடி வயத்தை கலக்கும்" என்றோ சொல்லி.. சின்ன சின்ன ஆசைகளில் ஒன்றாகவே இருந்தது. இனி இருக்காது. ரெண்டு கடி கடித்ததும் நான் சொன்னது, "Last Time! Never Again..”//
அந்தந்த வயசில சாப்டாதான் நல்லா இருக்கும். உங்க குட்டீஸுக்கு வாங்கி குடுத்தீங்களா
நன்றி சின்ன அம்மிணி
//உங்க குட்டீஸுக்கு வாங்கி குடுத்தீங்களா
//
என் குட்டிக்கு சோப்பு நுரை பபுள் ஊதும் ஆர்வம் டெல்லி அப்பளத்தில் இருக்கலை :)
சின்ன வயதில் டெல்லி அப்பளம் கேட்கும்போதெல்லாம், அம்மாவோ, அண்ணனோ.. "ச்சே.. என்ன கருமாந்திர எண்ணையில பொறிக்கிறானோ", "அந்த பொடி வயத்தை கலக்கும்" என்றோ சொல்லி.. சின்ன சின்ன ஆசைகளில் ஒன்றாகவே இருந்தது. இனி இருக்காது. ரெண்டு கடி கடித்ததும் நான் சொன்னது, "Last Time! Never Again..”
சோக்கோ பார் தின்னாமல் பொருட்காட்சி// நிறைவுபெறாது என்பதால் ஜமாய் ஐஸ்கிரீமின் ச்சோக்கோ வாங்கி சட்டையில் ஒழுகத் தின்றோம். கிளம்பும்போது குழந்தைக்கு வாங்கிக் கொடுத்த பொருளினால் அன்று இரவு வீடு முழுதும் வானவில் தோய்த்த முட்டைகள் பறந்தன.//
superb Pattiyan.. i enjoyed those lines..
நன்றி தேனம்மை
மிகவும் அழகான பகிர்வு நண்பரே...உங்களின் பகிர்வுக்கு மிக்க நன்றி...
நன்றி கமலேஷ்
தகவலுக்கு நன்றி
ஆ.ஊ.இ.பூ.ச மாதிரி
கண்ட பொடி தூவிய மாங்காய் பலமுறை சுட்ட எண்ணெய் அப்பளம் வாங்கித் தந்து பசங்களைக் கெடுக்காதீங்க.
சுவை என்பது நாவிலிருந்து தொண்டைக்குழிவரைதான்
அதன் பின் விளைவுகள்தான் அதிகம்
நன்றி கண்மணி டீச்சர்
//கண்ட பொடி தூவிய மாங்காய் பலமுறை சுட்ட எண்ணெய் அப்பளம் வாங்கித் தந்து பசங்களைக் கெடுக்காதீங்க.
சுவை என்பது நாவிலிருந்து தொண்டைக்குழிவரைதான்
அதன் பின் விளைவுகள்தான் அதிகம் //
அட்வைசுக்கு ரொம்ப நன்னி
//ஆ.ஊ.இ.பூ.ச மாதிரி//
இது என்ன? புரியலை..
ஆ.ஊ.இ.பூ.ச
ஆலை இல்லாத ஊருக்கு இலுப்பைப் பூ சர்க்கரை
தாஜ்மகால்..இல்லாத ஊருக்கு....இது
Post a Comment