வண்ணம்
வெயிலும் மழையும் சேர்த்துப் பார்த்தது
நினைவில் கூட இல்லை
வானவில் நேரில் பார்த்து
வருஷங்கள் பல
தார்ச் சாலை மழை நீரில்
வண்டி எண்ணெய் கலந்தோடி
பார்த்தேன் ஆசை தீற
இலுப்பைப்பூ சர்க்கரை
ராஜபார்வை
கொட்டும் மழையில்
குடை பிடித்து
வெட்ட வெளியில் நிற்கும்போதும்
வேர்க்கின்றது
என் பார்வையும் ராஜபார்வையோ
விதி வலியது
நேற்று..
கொளுத்தும் வெயிலில்
கால் கடுக்க
அனல் பறக்க
ஆர்டினரி பஸ் பயணம்
இன்று..
கொட்டும் மழையில்
குளிர் நடுக்க
கூட்டமில்லாத
குளிர்சாதன பேருந்து பயணம்
மர்பியும் மழையும்
என்றெல்லாம் மேலாளர் அழைத்து
"அர்ஜென்ட்.. ஆபீஸ் சீக்கிரம் வா", என்கிறாரோ
அன்றெல்லாம்
வெளுத்து கட்டுது மழை
தாமதமா வருது பேருந்து
நெரிசலில் தவிக்குது சாலை
அடிச்சிக்கிட்டே இருக்குது கைப்பேசி
Follow-up
நேற்று குடித்த
Ultra Chiiled Seven-Up க்கு
இன்று குடிக்கும்
சுக்கு காப்பி
வெப்பச் சலனத்தால் இன்று சென்னையில் மழை. பேருந்து நிறுத்தத்தில் கால் மரக்க நின்ற கணங்களில் கவிதை மழை கொட்டியது.. மழைக்கும் கவிஞருக்கும் இருக்கும் தொடர்பு உலகறிந்தது தானே.. (அட! அட! அட!) இப்படியெல்லாம் எழுதியாவது என்னை நானே கவிஞனுன்னு கூச்சமில்லாம சொல்லிக்கிறேனே!! .. LOL


2 comments:
//என் பார்வையும் ராஜபார்வையோ
//
:))))))))))))
தண்ணீரில் நிற்கும்போதே வேர்க்கின்றது... rgt?
வருகைக்கு நன்றி நாடோடி இலக்கியன்
Yes, you are right :)
Post a Comment